Ad Widget

நெடுந்தீவில் கைதான 7 தமிழக மீனவர்களும் விளக்கமறியல்!

லங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் புதன்கிழமை (26) சட்டவிரோதமாக படகொன்றில் நுழைந்த 7 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே, அப்பகுதியில் சுற்றுக்காவல் (ரோந்து)...

நாட்டின் முதல் பெண்மணி யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் “பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தின் ஊடாகப் புதிய இயல்பு நிலையில் நிலைபேறான அபிவிருத்தியை அடைதல்” என்ற தலைப்பிலான...
Ad Widget

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டம்

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிப்பதற்கான திட்டம் தொடர்பாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கும் தனியார் தொழில்நுட்ப குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் நடைமுறைப்படுத்தப்படும் பொதுப் போக்குவரத்துச் சேவை பற்றி அறிமுகம் செய்யப்பட்டது. கொழும்பு கோட்டை, கொம்பனி தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி,...

போதைப் பொருட்களுடன் 3 மாணவர்கள் கைது!

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் நேற்று (27) வியாழக்கிழமை போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் மூவரில் ஒருவர் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர் எனவும் மற்றைய இருவரும் சகோதரர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த மாணவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில்...

இந்திய பல்கலைக்கழக பட்டதாரிகளையும் அரச நியமனங்களில் உள்வாங்க தீர்மானம்!

அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகங்களில் பயின்ற பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது குறித்துநேற்று (வியாழக்கிழமை) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்திய...

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயார் – மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனமடுவயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நமது அமைப்பு நாட்டைப் பின்னுக்கு இழுக்கும் அமைப்பு அல்ல. தீ மூட்டுவது எளிது, ஆனால் அதை...

பாடசாலை மாணவர்கள் உட்பட 342 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்!!

நாட்டில் எச்.ஐ.வி. நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு முதலிரு காலாண்டுகளுக்குள் 148 எயிட்ஸ் நோயாளர்களே இனங்காணப்பட்ட நிலையில், இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில் 342 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு மற்றும் கம்பஹா...

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் மிகவும் ஆபத்தான தசாப்தத்தை எதிர்கொள்கிறது! புடின் எச்சரிக்கை

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் "அநேகமாக மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். இது தொடர்பில் மாஸ்கோவில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் உரையில் விளாடிமிர் புடின் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியுள்ளார். உலகின் தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையை "புரட்சிகரமானது" என்று அவர்...