Ad Widget

பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பு – முழு விபரம்!

பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் இன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 92 ரக பெற்றோலின் புதிய...

உயர் பாதுகாப்பு வலயத்துக்காக யாழில் 1,614.11 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க முயற்சி

யாழ்.குடாநாட்டில் 1,614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் சில இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இம்மாதம் ஜனாதிபதி ரணில் இரத்து செய்திருந்தார். இந்நிலையில் யாழில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மக்களின் காணிகளை...
Ad Widget

வல்லையில் தொடரும் வழிப்பறி கொள்ளை – பொலிஸார் பாராமுகம்!!

யாழ்ப்பாணம் வல்லை வெளி பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்று வரும் நிலையில் அச்சுவேலி பொலிஸார் பாராமுகமாக உள்ளதாக பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்படுகிறது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆள் நடமாட்டம் குறைவான வல்லை வெளி பகுதியில் மாலை மற்றும் முன்னிரவு வேளைகளில் மோட்டார் சைக்கிள்களில் நடமாடும் வழிப்பறி கொள்ளையர்கள் பெண்களை இலக்கு வைத்து...

தமிழகம் சென்ற இலங்கை அகதிகளின் எண்ணிக்கை 181

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர். இலங்கை தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள்...

வடக்கு கடற் தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் மீனவப் பிரதிநிதிகள் நிகழ்நிலையில் சந்திப்பு!

வடமாகாண கடற் தொழிலாளர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் வடமாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை ஜூம் (zoom) செயலி ஊடாக நேற்று முன்தினம் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற யாழ்ப்பாணம் உள்ள தீவு மன்னர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு தமது...

ஏழுநாள் காய்ச்சலால் எட்டு மாத குழந்தை உயிரிழப்பு!

ஏழுநாள் காய்ச்சல் காரணமாக பிறந்து எட்டுமாதங்களேயான ஆண்குழந்தை உயிரிழந்துள்ளது கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த எட்டுமாத குழந்தைக்கு கடந்த ஏழுநாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டது. இதனை அடுத்து கடந்த 14 ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவ தளத்தில் தீவிரவாத தாக்குதல் – 11 பேர் பலி – 15 பேர் காயம்

உக்ரைனுக்கு அருகிலுள்ள ரஷ்ய இராணுவ தளத்தில் சோவியத் ரஷ்ய ஆதரவாளர்கள் இருவர் பயிற்சியின் போது மற்ற வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையை ஒட்டிய தென்மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், சோவியத் தன்னார்வல வீரர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும்...