Ad Widget

ஜனாதிபதியை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள் ஆர்வம்!

காணிவிடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு வலிகாமம் வடக்கை சேர்ந்த 2500 குடும்பங்கள் விரும்புவதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். மயிலிட்டி பலாலியில் உள்ள தங்கள் பாரம்பரிய நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைளை எடுக்குமாறு கோருவதற்காகவே அவர்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கு ஆவலாக உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தன்னை நாங்கள்...

ஆபாச காணொளியை காட்டி 7 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை யாழில் கைது!

ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் 30 வயதான குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தந்தை , தனது 7 வயதான மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து , மது போதையில் மகளை...
Ad Widget

எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு

நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம்...

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அவுஸ்திரேலியா எச்சரித்துள்ளது. இலங்கையும் அவுஸ்திரேலியாவும் சட்டவிரோதமாக எல்லைகளை கடக்க முயற்சிக்கும்...

சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சி: 4 சந்தேக நபர்களுக்கும் பிணை!

எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 4 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த...

பாடசாலை மாணவிகளுக்கு இலவசம் – அடுத்த மாதமும் முதல் நடைமுறையில்

பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் நெப்கின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நெப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது 10 முதல் 18 வயது வரையிலான மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்பில் இந்த நாட்டில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருடனும்,...

புடினின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!

உக்ரைனின் சில பகுதிகளை சட்டவிரோதமாக இணைக்கும் ரஷ்யாவின் முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது உக்ரைனில் ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு பகுதிகளை ரஷ்யா சட்டவிரோதமாக இணைக்க முயற்சித்ததை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கண்டித்துள்ளது. அத்தடன், இந்த நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என்று அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்...