Ad Widget

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு காலக்கெடுவை விதிக்க வேண்டும் – சம்பந்தன்

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நிலைநாட்டுவதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் சர்வதேச நாடுகளும் காலக்கெடுவை விதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஐ.நா.விலும்...

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என கடிதம் எழுதி சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்!

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் வசிக்கும் தாயொருவர் தனது 15 வயது மகன் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளமையால், மகனை தன்னால் பராமரிக்க முடியவில்லை என...
Ad Widget

2ஆம் லெப்டினட் மாலதிக்கு நினைவேந்தல்!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வீரச் சாவடைந்த முதல் பெண் போராளி 2ம் லெப்டினன்ட் மாலதி (பேதுருப்பிள்ளை சகாயசீலி)யின் நினைவேந்தல் இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார். நேற்று மாலை 6 மணிக்கு மாலதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. வேலன்...

வடக்கில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எச்சரிக்கை!

வடக்கில் சட்ட விரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டம் நடாத்தப்படும் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்ன ராசா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் நேற்று (திங்கள்கிழமை) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்...

ஒரே நேரத்தில் சேவையில் இருந்து வெளியேறிய 249 விசேட வைத்திய நிபுணர்கள்

இலங்கையில் விசேட வைத்தியர்களின் தேவையில் 45 சதவீதம பற்றாக்குறை நிலவுகின்ற போதில் 249 விசேட வைத்திய நிபுணர்கள் ஒரே நாளில் ஓய்வு பெறவுள்ளனர். இதன் காரணமாக வைத்தியசாலை கட்டமைப்பு கடும் நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதிக எண்ணிக்கையிலான சிறப்பு மருத்துவர்கள் ஓய்வு பெறுவதால், மருத்துவப்...

புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் – வெளியாகியுள்ள எச்சரிக்கை

உக்ரைன் அதிக நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றுவதால் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக உக்ரைனின் முன்னாள் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் எந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுகிறதோ அந்த அளவுக்கு விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என உக்ரைனின் முன்னாள் பிரதமர் அர்செனி யாட்சென்யுக் தெரிவித்துள்ளார்.. சர்வதேச ஊடகம்...

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல் தொடர்பான அனைத்து கட்டணங்களும் உயர்வு!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிட்டுள்ளார். அதன்படி, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் ஆகியவற்றுக்கான கட்டணம்...