Ad Widget

யாழில் சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் திறந்து வைப்பு

யாழில் புதிதாக அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் மற்றும் பாரதியாரின் திருவுருவச்சிலைகள் நேற்று (ஞாயிற்க்கிழமை) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதற்கமைய அகில இலங்கை சைவமா சபையினால் உருவாக்கப்பெற்ற விபுலானந்தரின் திருவுருவச்சிலையினை தென் கையிலை ஆதின குருமுதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் திறந்து வைத்தனர். அதேபோல் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருடைய திருவுருவ...

பலாலி – சென்னை இடையே மீண்டும் விமான சேவை!!

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மூன்று வருடங்களுக்குப் பின்னர் அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த தகவலை கொழும்பு ஆங்கில வார இதழான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம் கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை...
Ad Widget

ரயில்களில் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில், ரயில்களில் பல கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பயணிகளை காயப்படுத்தும் வகையில் சில கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆதரவுடன் அவசர பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்....

யாழில் கூரிய வாள்களுடன் இளைஞன் கைது!

யாழில் இயங்கி வரும் ஆயுதமேந்திய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் மூன்று கூரிய வாள்களுடன் யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக யாழ்.பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், தாவடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....

வங்கிகளுக்கு விடுமுறை – அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் வழமைபோன்று இடம்பெறும்

நாடளாவிய ரீதியில் உள்ள வங்கிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மீலாதுன் நபி தினம் நேற்று கொண்டாடப்பட்டதை முன்னிட்டு இன்று வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் அரச அலுவலகங்களின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். அத்தோடு, பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என...

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை மக்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வைக்கொடுக்காது – சுமந்திரன்

ஜெனிவா மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்தாத தீர்மானங்களைத்தான் இந்த பேரவைக்கு நிறைவேற்ற முடியும். அதனால் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மூலம் எமது மக்களது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைக்கொடுக்காது. என்றாலும் இந்த பிரேரணை இலங்கைக்கு மிகவும் சவால் மிக்கதானதாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன்...

ஜப்பான் வாகன விவகாரத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: மணிவண்ணன்

கழிவகற்றல் வாகனங்களுக்கான இறக்குமதிக்கான செலவு நிதியை மீளப் பொறுப்பேற்குமாறு இப்போதைய பதில் முதல்வர் ஈசன் காலத்தில் யாழ்.மாநகர ஆணையாளர் ஜப்பான் தூதரகத்துக்கு எழுத்து மூலம் கடிதம் எழுதினார் என யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் மாநகர சபையின் முதல்வர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

அவதானமாக செயற்படுங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இன்றைய வானிலை குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது எனவும்...

இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த மகிந்தவினால் ஏற்பட்ட பரபரப்பு

அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒன்றிணைந்து நிற்போம் - களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம் என்ற தொனிப்பொருளில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் நேற்று முனதினம்...

ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு உக்ரேனில் ரஷ்யர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறிய ஏழு குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும், அவர்களை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கொழும்பை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாதம் உக்ரேனியப் படைகள் கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தை மீட்டெடுத்த போது விடுவிக்கப்பட்ட ஏழு இலங்கையர்களும்,...