Ad Widget

முல்லைத்தீவில் பதற்றம் : பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முல்லைத்தீவில் பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் அங்கு ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்த பொலிஸார்...

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அரச ஊழியர்கள் கோரிக்கை!

அதிகரித்துள்ள பணவீக்கத்திற்கு இணையான கொடுப்பனவு, அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் பொதுச்செயலாளர் தம்மிக்க முணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை செலவினம் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. உணவு...
Ad Widget

குறைக்கப்பட்டது லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை!

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ எரிவாயுவின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4 ஆயிரத்து 280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ஆயிரத்து 720 ரூபாவாக காணப்படுகின்றது. மேலும் லிட்ரோ...

யாழ். மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பு!

நொதோர்ன் தனியார் வைத்தியசாலை ஸ்தாபகர் எஸ்.பி.சாமியால், யாழ் மாநகர சபைக்கு இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான தீயணைப்பு வாகனம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) நொதோர்ன் தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு யாழ். மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்புப் படை வாகனம் விபத்தில்...

மீண்டும் அதிகரிக்கப்பட்டன தொலைபேசி கட்டணங்கள்!

தொலைபேசி நிறுவனங்கள் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தினை அதிகரித்துள்ளன. 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த கட்டண உயர்வு குறித்து சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனங்கள் விரிவான தகவல்களை வெளியிடவுள்ளன.

உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிப்பு

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பெக்கெட்டின் விலை 850 ரூபாயில் இருந்து 950 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோ பால் மா பெக்கெட்டின் புதிய விலை 2350 ரூபாவாகும். முன்னதாக ஒரு கிலோ பால் மா...

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நேற்று முன்தினம்(03) கடற்தொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. கடற்தொழிலாளர்களது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரை தொடர் போராட்டத்தினை தொடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனத்தினால் குறித்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில்...

மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது – உறுதி செய்த அமெரிக்கா

மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிற்கும் உக்ரைனின் மேற்கத்திய நட்பு...