Ad Widget

ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோர் பிணையில் விடுதலை!

குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும் நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் நேற்று (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம் மேற்கொண்டமைக்காக தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுளமுனை கிழக்கு...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி...
Ad Widget

சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்ககா 2.3 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி பங்களிப்பினை யாழ்ப்பாண மரபுரிமை மையம் வழங்கவுள்ளது. குறித்த தோரண வாயிலின் பாதுகாப்பு , புனர்நிர்மாணம் மற்றும்...

மீண்டும் நாட்டில் நிதி நெருக்கடி : அரச பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதில் சிக்கல்!!

நிதி நெருக்கடி காரணமாக அரச பணியாளர்களுக்கு மாதாந்த சம்பளம் செலுத்துவதற்கு போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொல்கஹவெல குருநாகல் தொடருந்து பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசின்...

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் எழுச்சிபூர்வமாக இடம்பெறும்- மணிவண்ணன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களை விட இம்முறை நிலைமை சற்று சீராகக் காணப்படுவதால், தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை...

டொலரை செலுத்தியவர்களுக்கு மட்டுமே சிலிண்டர் விநியோகம்: புதிய எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது -லிட்ரோ

உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள...

யாழில் 11 வயது மகளை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்திய தாய்!

தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத...

சிங்கள பௌத்த அடையாளங்களை புகுத்துகின்றார்கள்! சட்டத்தரணி சுகாஷ்

தமிழர்களினுடைய வாழ்விடங்களில் திட்டமிட்டு அவர்களின் இன அடையாளங்களை அழித்து, சிங்கள பௌத்த அடையாளங்களை புகுத்துகின்ற, கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினுடைய பாகம், தொடர்ந்தும் அரங்கேறிக் கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளரும், சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நேற்று (21.09.2022) இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பு! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

முல்லைத்தீவு - தண்ணீர்முறிப்பு குருந்தூர் மலைப்பகுதியில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் ஆக்கிரமிப்பிற்கு உட்படுவதாக தெரிவித்து தண்ணிமுறிப்பு கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்ததோடு கவனயீர்ப்பிலும் ஈடுபட்டது. இதன்போது வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம், பிரிக்காதே பிடிக்காதே தமிழர் தாயகத்தை பிரிக்காதே, குருந்தூர் மலை...

ரஷ்யா முழுவதும் வெடித்த போராட்டம் – நூற்றுக்கணக்கானோர் கைது

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info...