Ad Widget

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தண்டனையிலிருந்து விடுபடுவதை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான நிறுவன,...

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரி நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் இன்றும் தொடர்கிறது

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், மாவட்டபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (12) வல்லை வெளி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக தேங்காய் உடைத்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும், சர்வஜன...
Ad Widget

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டில் வெளியேறி உள்ளார்கள். சுகாதார துறையில்...

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு!

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தார். 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு...

கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார் . உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து...

யாழில் அண்ணன் செய்த செயலால் தங்கை தற்கொலை!

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது....

51 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார். இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி...

திருக்கோணேஸ்வர ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாக யாழில் விசேட சந்திப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். – நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலககத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பாக...