Ad Widget

தென்னிலங்கையில் உள்ள தமது சொத்துக்களை பாதுகாக்க யாழ்ப்பாணத்தில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்கிறார்கள்!!

தியாகி திலீபனின் நினைவேந்தலை 2016ம் ஆண்டு நடத்தியவர்கள் நாங்கள், 2017ம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து நினைவேந்தலை நடத்த கேட்டது தமிழ் காங்கிரஸ், 2018ம் ஆண்டு யாழ்.மாநகரசபை செய்தது. பின்னர் இரு வருடங்கள் சீராக நடக்கவில்லை. பின்னர் எப்படி 6 வருடங்களாக தியாகி திலீபனின் நினைவேந்தலை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நடத்தியது?மேற்கண்டவாறு ஜனநாயக போராளிகள் கட்சியின்...

நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்கள் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – ஐங்கரநேசன்

திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பங்களும் அதையொட்டிய ஊடகச் சந்திப்புகளும் பேரினவாதிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தியாக திலீபன் நினைவேந்தல் குழப்பங்கள் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,...
Ad Widget

யாழ். போதனா வைத்திய சாலையில் கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 21 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது குறித்த இளைஞனிடம் இருந்து 21 கையடக்க தொலைபேசிகளை பொலிஸார்...

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் பாவனை எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடதக்கது

மீண்டும் அதிகரிக்கப்படுகின்றது பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகள்!

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். எட்டு சதவீதமாக இருந்த வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக...

திலீபன் நினைவேந்தலில் ஏற்பட்ட குழப்பம்: ஊடங்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தவறான செய்திகளை பிரசுரித்த ஊடகங்களுக்கு தவறை திருத்த ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறோம் எனவும் எங்களை ஊடகங்கள் மிதிப்பதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க. சுகாஸ் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும்...

தொழில்முனைவோருக்கு கடன் நிவாரணம் – அரசாங்கம் விசேட நடவடிக்கை

தொழில்முனைவோரின் கடன் தவணைகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அரச வங்கிகளின் தலைவர்களுக்கு இராஜாங்க நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அரச வங்கிகளில் பெறப்படும் கடனுக்கான வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிப்பதால் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சகத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அரச வங்கியின் தலைவர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த அறிவித்தல்...

உக்ரைனின் கட்டுப்பாட்டு பகுதியில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ரஷ்யா அறிவிப்பு

உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, 93.11 சதவீத வாக்காளர்கள் ரஷ்ய இணைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், இது ஒரு முதற்கட்ட முடிவு என்று...

விபத்துக்குள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின்னர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பகுதியை சேர்ந்த கோணேஸ்வரன் ஹரிபிரணவன் என்ற 29 வயதுடைய பொலிஸ் உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த ஜூன் மாதம்...

மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுல்!

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டும் மூன்று மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் நாளை முதல் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபடும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வடக்கில் சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொருளாதார நெருக்கடியின் தீவிரம் மற்றும் வீட்டு நிதி பற்றாக்குறை காரணமாக வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில், 246 சிறுவர்கள் வடமாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லங்களில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

யாழில், வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பலாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து...

ரஷ்யாவில் இருந்து தப்பியோடும் ஆண்கள் – வெளியானது செயற்கைக்கோள் படங்கள்

ரஷ்யாவில் நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் ஜோர்ஜியாவை கடக்க காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. லார்ஸ் சோதனைச் சாவடியில் ரஷ்யாவிலிருந்து அதன் தெற்கு அண்டை நாடான ஜோர்ஜியாவிற்கு எல்லையைக் கடக்க நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. உக்ரைனுக்கு எதிராக போரிட இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி...

தியாகி திலீபனுக்கு யாழ். பல்கலையிலும் அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம், இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த 10.48 மணிக்கு நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், பொதுச் சுடரும் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக...

திலீபனின் நினைவிடத்தில் எல்லை மீறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் – வேடிக்கை பார்த்த கஜேந்திரகுமார்!

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பத்தினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவ்வாறு...

இனப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவிட்டால் தேசிய பேரவையில் இணையப்போவதில்லை – சுமந்திரன்

இனப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் தேசிய பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணையப் போவதில்லை என அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பேரவையில்இணையாது என நாடாளுமன்றதிற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆகவே இனப் பிரச்சினைகளுக்கான தீர்வினை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும் என்றும் அதன்...

உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாகி திலீபனின் 35 ஆவது ஆண்டு அஞ்சலி நாள்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை...

ஹெரோயினுக்காக இளம் யுவதி செய்த காரியம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உயிர்கொல்லிப் போதைப் பொருளான ஹெரோய்னுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் மறுவாழ்வு நிலையத்துக்கு நேற்று அனுப்பப்பட்டார். அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிக்கின்றார் சிறுமியின் தாயார் வழங்கிய...

கோட்டாபயவின் மனைவியை மிரட்டி கப்பம் கோரிய இளைஞன்!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மனைவி அயோமா ராஜபக்சவை மிரட்டி 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். [caption id="attachment_115149" align="aligncenter" width="600"] gotha-wife[/caption] கொலன்னாவ பிரதேசத்தில் சலூன் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அயோமா ராஜபக்சவின் தனிப்பட்ட தொலைபேசிக்கு...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் தற்போது எண்ணெய் விலை ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு...
Loading posts...

All posts loaded

No more posts