Ad Widget

மன்னாரில் பாரிய போராட்டம்!

மன்னார் தீவு பகுதியில் இடம் பெற்று வரும் கனிய வள மண் அகழ்வு மற்றும் உயர் வலு கொண்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மன்னாரில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்ற இந்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல...

யாழில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் கைது!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 17 பேர் இன்று திங்கட்கிழமை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை...
Ad Widget

16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என குற்றச்சாட்டு!

16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல்வாதிகள் பெரிய தியாகம் செய்ய...

100 கிலோ கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது!

பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை சுமார் 100 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி அன்ரனிபுரம் பகுதியில் அதிகாலை இரண்டு மணியளவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணித்த வேன் வாகனத்தை கடற்படையினர் சோதனையிட்ட போது, அதனுள் பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து வாகனத்தை கைப்பற்றிய கடற்படையினர், வாகனத்தில் இருந்த...

இன்று மணியங்குளம், அறிவியல் நகர், வலைஞர் மடத்திற்கு நேராக சூரியன் உச்சம்

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக ஓகஸ்ட் 28 இலிருந்து செப்டெம்பர் 07 வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கமைய, இன்றையதினம் (29) மணியங்குளம், அறிவியல் நகர், வலைஞர் மடம் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.11 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஊவா,...

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவை மீள ஆரம்பம்!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் எலிக்காய்ச்சலால் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் குறித்த சிப்பாய் கடந்த 22ஆம் திகதி எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் , முன்னதாக பலாலி இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர்...

இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட 24 வெளிநாட்டு கம்பனிகள் விருப்பம் – காஞ்சன

இலங்கையில் பெற்றோலிய வர்த்தக நடவடிக்கைளில் ஈடுபடுவதற்கு 24 வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா, நோர்வே மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 24 நிறுவனங்களே இவ்வாறு இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தில் ஈடுபட விருப்பம்...

எரிபொருள் இல்லையென பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமாம்!

நாடளாவிய ரீதியில் 500 தொடக்கம் 1000 மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தற்போது விநியோகிக்கப்படும் 4000 மெட்ரிக் தொன்னுக்கு மேலதிகமாக டீசலை விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் 3000 மெட்ரிக் தொன் பெட்ரோல் விநியோகிக்கப்படும் அதேவேளை, அதற்கு மேலதிகமாக 500 தொடக்கம் 1000...

யாழில், போதைப்பொருள் வர்த்தகர் கைது!

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் புகையிரத பகுதியில் குறித்த நபர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் 27 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். சந்தேக...

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவர்களுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டு பணியாளர்கள் ஈட்டும் வருமானத்தை டொலரில் இலங்கைக்கு அனுப்பாமல் வெளிநாடுகளில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பகிர்ந்தளிக்கும் திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியும் பொலிஸாரும் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உண்டியல், ஹவாலா போன்ற முறைகளில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாறிக்கொண்ட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்...

ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் தாக்கத்தை ஏற்படுத்தாது – பிரித்தானியா

ரஷ்யாவின் ஆயுதப் படைகளை விரிவுபடுத்தும் திட்டம் உக்ரைன் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அந்நாட்டின் ஆயுதப் படைகளின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 1.15 மில்லியனுக்கும் அதிகமாக உயர்த்துவதற்கான ஆணையில் அண்மையில் கையெழுத்திட்டார். எனினும் இந்த நடவடிக்கை ரஷ்யாவின் போர் சக்தியை அதிகரிக்க வாய்ப்பில்லை...