Ad Widget

அனைத்து பல்கலைக்கழங்களும் செப்டம்பரில் திறக்கப்படும்!

நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் இயல்பு நிலை காரணமாக இந்த தீர்மானம்...

கிளிநொச்சியில் விவசாயிகள் போராட்டம்!

சிறுபோக அறுவடைக்கு டீசல் பெற்றுத்தருமாறு கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து மகஜர் கையளிக்க சென்ற விவசாயிகள், இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு, அறுவடை இடம்பெற்று வரும் நிலையில், அறுவடைக்கு தேவையான டீசலை விரைவாக பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்....
Ad Widget

யாழ்ப்பாணம் , திருகோணமலையை சேர்ந்த 08 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

இலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையை சேர்ந்த மேலும் 08 பேர் கடல் வழியாக தமிழகம் சென்று தஞ்சமடைந்துள்ளனர். 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்களாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 08 பேரே படகொன்றில் தமிழகம் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர். அவர்களை மீட்ட கடலோர பாதுகாப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்....

கடமை நேரத்தில் மதுபோதையிலிருந்த துப்புரவு பணியாளருக்கு எதிராக யாழ் மாநகர சபை நடவடிக்கை!!

மதுபோதையில் நின்று பணிசெய்த துப்புரவு பணியாளருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த யாழ் மாநகர சபை உறுப்பினர் மற்றும் மேற்பார்வையாளர் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நல்லூர் ஆலய உற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை துப்பரவு பணியில் ஈடுபட்ட ஊழியர் மதுபோதையில் நிற்பதை அவதானித்த...

பாடுபட்டு உழைக்கத் தயாரில்லாத அரச உத்தியோகத்தர்கள் தொழிலை விட்டுச் செல்லலாம் – ஜனாதிபதி ரணில்

நாட்டிலுள்ள ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 9 அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு பாடுபட வேண்டும். அவ்வாறு பாடுபட முடியாது எனக் கூறுபவர்கள் வீட்டுக்குச் செல்லலாம். எந்தவொரு வேலைகளிலும் ஈடுபடாதவர்களுக்கு சம்பளத்தை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட அபிவிருத்தி சபை...

பல்கலை மாணவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டம் : வருந்தத்தக்கது சுமந்திரன்

பயங்கரவாதம் எனக்கூறி மூன்று மாதங்களுக்கு பல்கலைக்கழக மாணவர் தலைவர்களை தடுப்பிலேயே வைத்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டி...

253 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது மண்ணெண்ணெய் விலை – புதிய விலை 340 ரூபாய்!

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை – 87 ரூபாய் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை – 340 ரூபாய்

இன்று 3 மணித்தியால மின்வெட்டு அமுல்!

இன்று (22) 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, பகலில் 1 மணி நேரம் 40 நிமிடமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில்...

வடக்கில் முதியவர்களை கண்காணிப்பதற்கு ஆளுநர் விசேட திட்டம்!

வட மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கண்காணிப்பதற்காக வடமகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வயதான முதியவர்கள் உடல் உள ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆரோக்கியம் குன்றுதல், அறிவாற்றல் குறைதல், மனநிலையில் பாதிப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் செயல்திறன்...

ரஷ்ய அதிபரின் மூளையாக செயற்பட்டவரின் மகள் குண்டுவெடிப்பில் பலி

ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உதவியாளரின் மகள் கார் வெடித்து பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் புடினின் முக்கிய ஆலோசகரும், புடினின் மூளையாகவும் செயற்பட்ட அலெக்சாண்டர் டக்கினை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் அவரது மகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பத்திரிக்கையாளராவும், அரசியல் விமர்சகராகவும் பணியாற்றிவந்த அவரது மகள் டார்யா டகினா (Darya Dugina), நிகழ்ச்சி ஒன்றில்...