Ad Widget

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானார் !

இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை டல்ஸிற்கு 82 வாக்குகளும் அனுரவிற்கு 3 வாக்குகளும் கிடைத்தன, இதனை சபாநாயகர் உத்தியோகபூர்வமாக பாராளுமன்றில் அறிவித்தார்.

தவறான சிகிச்சை முறையினால் 15வயது மாணவன் உயிரிழப்பு??

குருதிப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் நாடி வைத்தியம் என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த சிறுவனின் குடும்பத்தினர் உரும்பிராயில் உள்ள நபரை நாடி வைத்தியத்தை நம்பி வட்டுக்கோட்டையில் தங்கியிருந்து மகனுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த 15 வயது மாணவன் வட்டுக்கோட்டையில் உள்ள வீடோன்றில் நேற்று உயிரிழந்தார்....
Ad Widget

கூட்டமைப்பு – டலஸ், சஜித் இடையிலான எழுத்துமூல உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் இதோ !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட எழுத்துமூலமான உறுதிப்பாட்டின் உள்ளடக்கம் வெளியாகியுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கீழ்வரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும், தாம் பதவிக்கு வந்து, மூன்று தொடக்கம் ஆறு மாத காலம் முடிவடைவதற்குள் குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி...

செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேவேளை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை

நான்கு வாக்குகள் செல்லா வாக்குகள்!

ஜனாதிபதித் தெரிவுக்கான நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தலைமையில் இந்தப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில், நான்கு வாக்குகள் செல்லா வாக்குகளாக அளிக்கப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு!!

பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தனது வாக்கை, பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

6 லீற்றர் பெற்றோலுக்காக பல்கலைக்கழக மாணவி செய்த காரியம்!

யாழ் மீசாலைப் பகுதியில் வசிக்கும் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஒரு மூடை நெல் கொடுத்து 6 லீற்றர் பெற்றோல் வாங்கி தனது மோட்டார் சைக்கிளுக்கு விட்டு உல்லாச சவாரி செய்துள்ளார். தனது நண்பியின் பிறந்த தினத்திற்காக மீசாலையில் இருந்து வட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று பிறந்த தினத்தை சிறப்பித்த குறித்த மாணவியை...

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம்!

வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்வரும் 21 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய, எரிபொருள் வழங்கப்படும் நாட்களில் இவ்வாறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, 0,1,2 ஆகிய இலக்கங்களுக்கு செவ்வாய்...

முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படாது என அறிவிப்பு!

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளது. அத்துடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. முதலாம் தரம் தொடக்கம் 11 ஆம் தரம் வரையில், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜூலை...

“எத்தனை பேருக்கு முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ – பகிரங்க சவால் விடுத்தார் சுமந்திரன்!

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

டலஸை ஆதரிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாட்டைப் பெற்றது கூட்டமைப்பு

புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருமவுக்கு இன்றைதினம் ஆதரவாக வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அகழப்பெரும மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடமிருந்து எழுத்துமூலமான ஆவணம் பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருவை ஆதரிப்பதற்காக நிபந்தனைகளை விதித்து எழுத்துமூலமான ஆவணத்தினைப் பெற்றுக்கொண்டதா இல்லையா...

புதிய ஜனாதிபதி தெரிவு இன்று! நாடாளுமன்றத்தை சுற்றி பலப்படுத்தப்படும் பாதுகாப்பு

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14...

இலங்கை வழமை நிலைக்கு திரும்ப எவ்வளவு காலம் எடுக்கும்??

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை விரைவில் வழமை நிலைக்கு திரும்பும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐந்து அல்லது பத்து வருடங்கள் தேவையில்லை எனவும், அடுத்தாண்டின் இறுதிக்குள் பொருளாதாரம் ஸ்திரமடைய ஆரம்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். CNN செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார். நாட்டின்...