Ad Widget

மேலும் 7 பேர் அகதிகளாக தழிமகத்தில் தஞ்சமடைந்தனர்!

நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் பேர் இன்று (19) காலை தமிழகத்தின் தனுஷ்கோடியை சென்றடைந்தனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து 116 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்நிலையில் யாழ்பாணம் மாவட்டம் நாவர்குழியை சேர்ந்த மேரி அகஷ்டா (44) அவரது இரண்டு குழந்தைகள் மேலும் திரிகோணமலை மாவட்டம்...

கூட்டமைப்பின் சில எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு வழங்க தீர்மானம்?

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக...
Ad Widget

பாரிஸில் மதுபானசாலையில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி ; 4 பேர் காயம்

பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூடு நேற்று திங்கட்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகரின் 11வது வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. அரோண்டிஸ்மென்ட் மேயர் துப்பாக்கிச் சூடு நடந்ததை உறுதிப்படுத்தியதோடு, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலின் பின்னணியில் உள்ள உள்நோக்கங்களை இந்த கட்டத்தில் எந்த உறுப்பும்...

ஜனாதிபதி பதிவிக்கு மும்முனை போட்டி ! ரணில், அநுரகுமார, டலஸ் களத்தில் !

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலையடுத்து ஏற்பட்ட வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய , பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார். இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ...

ஜனாதிபதி போட்டியில் இருந்து சஜித் விலகல் – ஆதரவு டலஸுக்கு!

ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ட்விட்டர் செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

ஆவா மீது வாள்வெட்டுத் தாக்குதல் – 10 பேர் கொண்ட கும்பல் நடு வீதியில் வைத்து நடத்தியது

ஆவா என்று அழைக்கப்படும் வினோதன் என்ற வன்முறைக் கும்பலின் தலைவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயங்களுக்குள்ளான அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். 10 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடத்தியவர்களில் ஐவர் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக...

பெற்றொல் கப்பலும் நாட்டை வந்தடைந்தது!! – தூர இடங்களுக்கு முதலில் விநியோகம்!!

03 வாரங்களுக்கு மேலான காலப்பகுதியின் பின்னர், பெற்றோல் ஏற்றிய முதலாவது கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. கப்பலில் உள்ள பெற்றோலின் மாதிரி பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 02 டீசல் கப்பல்களில் கொண்டு வரப்பட்ட டீசலை இறக்கும் பணி இறுதி இலக்கை அடைந்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்காஞ்சன விஜேசேகர...

எரிபொருள் அட்டையை பெற்றவர்களுக்கான அறிவிப்பு!!

தேசிய எரிபொருள் அட்டையை பெற்றுக்கொள்ள பதிவு செய்தவர்கள், எரிபொருள் ஒதுக்கீட்டை அறிந்து கொள்ள விசேட நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. FUEL BAL இடைவெளி வாகன இலக்கம் (உதாரணமாக: ABC 1234) என டைப் செய்து 076 6220 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்தி SMS அனுப்புவதன் மூலம் எரிபொருள் இருப்புத் தொகையை அறிந்து கொள்ள...

தொலைபேசியில் சம்பந்தனை அழைத்த ரணில்! வீடு தேடிச் சென்ற சஜித்!!

இலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், அடுத்த ஜனாதிபதி யார் என்ற கேள்வி நாட்டு மக்களிடத்திலும், அரசியல் பரப்பிலும், சர்வதேசத்திலும் பாரிய எதிர்பார்ப்புக்களை...

கொழும்பில் குவிக்கப்படும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அவசர நிலை கருத்திற்கொண்டு, மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும், உறுதி...

உக்ரைன் போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினி சாவிற்கு முகம் கொடுக்க நேரிடும் – பதில் ஜனாதிபதி ரணில்

உக்ரைன் போர் நிறுத்தப்படாவிட்டால் உலக மக்கள் பட்டினி சாவிற்கு முகம் கொடுக்க நேரிடும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் உக்ரைன் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என உலகப் பட்டினி மற்றும் பஞ்சம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“மேற்குலக நாடுகளின்...