Ad Widget

சிங்கப்பூர் நோக்கி பயணத்தினை ஆரம்பித்தார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார். சிங்கப்பூர் சென்றதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் என எதிர்பாக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி எயார்லைன்ஸ் SV788 விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாம் கைப்பற்றிய இடங்களில் இருந்து வெளியேறுவதாக காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவிப்பு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கடந்த 98 நாட்களாக அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டக்காரர்கள் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு...
Ad Widget

ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு !

கொழும்பு நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று வியாழக்கிழமை (14) நண்பகல் 12 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் இராணுவ அதிகாரியின் துப்பாக்கியை களவாடிச் சென்றதாக குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே ரீ 56 ரக துப்பாக்கி களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. துப்பாக்கியுடன் அதற்கான 60 தோட்டாக்களும் களவாடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொல்துவ...

சிங்கப்பூர் பயணத்தை திடீரென நிறுத்திய கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர். சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில், பாதுகாப்பு நிலைமை காரணமாக பயணம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே ஜனாதிபதி தனி...

இலங்கையின் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை செய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சியோலில் நடந்த ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் தனது உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் மீதான...