Ad Widget

பாண் உட்பட ​பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு!!

450 கிராம் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது – யாழ். பல்கலை. கலைப்பீட மாணவர் ஒன்றியம்

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில், வடக்கு கிழக்கில் ஊடக அடக்குமுறை என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக...
Ad Widget

நிற்காமல் சென்ற பேருந்து மீது யுவதி கல் வீச்சு!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் வழிமறித்த குறித்த யுவதி பேருந்து நிறுத்தப்படாததையடுத்து ஆத்திரமடைந்த குறித்த யுவதி பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார்....

எரிபொருள் வழங்க கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம்

எரிபொருள் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர்களே வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக...

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் – லிட்ரோ நிறுவனம்

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் இன்றைய தினம் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளை முதல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தினை மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த மே மாதத்திற்கான மின்சார கட்டண பட்டியலினை சமர்ப்பிக்குமாறும் லிட்ரோ...

நாட்டை விட்டு வௌியேற முற்பட்ட பசில் ராஜபக்ஷ

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பெற்றோல் வரிசையில் நின்ற இன்னுமொருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்றுவிட்டு இளைபாறச் சென்ற ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில், மோட்டர் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு குடும்பஸ்தர் ஒருவர் எரிபொருளுக்காக வரிசையில் நின்றுள்ளார். இந்த நிலையில், பெற்றோல்...

ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன: ரணில்

அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும் அரசியலமைப்பின் ஊடாக மக்களின் கருத்துகளையும் கேட்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்கள் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்றும் அரசியலமைப்புக்கு...

இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டா !

ராஜினாமா கடிதத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடிதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதை அடுத்து, இராஜினாமா குறித்து சபாநாயகர் நாளை புதன்கிழமை அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிபிசி ஊடகத்திடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இல்லை என்றும் அருகில் உள்ள நாடொன்றில் இருப்பதாகவும் சபாநாயகர் கூறியிருந்தார்....

அலரி மாளிகையில் மோதல்: பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள் – 10 பேர் காயம்

அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் காயமடைந்த பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரி மாளிகையில் மக்கள்...

ரஷ்யாவை எதிர்கொள்ள பல லட்சம் பலம் வாய்ந்த உக்ரைன் படையினர்

உக்ரைன் நாட்டின் தென் பகுதிகளை, ரஷ்யர்களின் ஆக்கிரமிப்பதில் இருந்து மீட்பதற்காக நேட்டோ ஆயுதங்களுடன் கூடிய பல லட்சம் பலம் வாய்ந்த இராணுவத்தைகளமிறக்க திட்டமிடப்படுவதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். கருங்கடல் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்டெடுப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது என்று அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார். கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யா முன்னேற்றம் அடைந்துள்ள...