Ad Widget

திங்கட்கிழமை முதல் பாண் உற்பத்தி செய்ய முடியாத நிலை!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ள என யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வெதுப்பக உரிமையாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இயற்கை...

பம்பலப்பிட்டியில் எரிபொருளுக்காக காத்திருந்தவர் உயிரிழப்பு!!

கொழும்பு - பம்பலப்பிட்டி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் இன்று (07) உயிரிழந்துள்ளார். வரிசையில் காத்திருந்த குறித்த நபர் திடீர் சுகயீனமுற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 62 வயதுடைய புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவராவார். சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
Ad Widget

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(08) முதல் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார். பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் அதிகரித்து உள்ளது. இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் நேற்றைய தினம் புதன்கிழமை பத்து துவிச்சககர...

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு?

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில்...

கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்!!

பத்தரமுலையில் உள்ள குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளார். கடவுச்சீட்டு பெற வந்த ஹட்டனை சேர்ந்த பெண்ணுக்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது. வரிசையில் நின்று பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்த இராணுவ வீரர்கள், அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர். அதற்குள்...

வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானம்!!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல சீலமானாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். கிராம அலுவலர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்...

திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் கைது!!

பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின்...

காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!!

யாழ்.காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பம்பி பழுதடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். நேற்று காலை காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும்...

உச்சக்கட்ட போர் பதற்றம் – அணு ஆயுதங்களை மேம்படுத்தும் உக்ரைன்

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன், அணு ஆயுதங்களை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. உலகின் மிக அழிவுகரமான ஆயுதத்தை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்தினால்தான், ரஷ்யாவின் படையெடுப்பு எதிர்காலத்திலும் தொடராது என்று உக்ரைன் கருதுகிறது. லாஃப்பரோவில் உள்ள சர்வதேச வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் டாக்டர் பால் மாட்ரெல், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அணு ஆயுதக்...