Ad Widget

அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 212 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இலங்கை அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல 58 ஓட்டங்களை...

அச்சுவேலியில் தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலகல்!

இலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் நீண்ட நாட்களாக காத்திருந்த போதிலும், தமக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்காததால் தாம் சேவையில் இருந்து விலகி உள்ளதாக அச்சுவேலி தனியார் பேருந்து சாரதிகள் தெரிவித்துள்னர். யாழ்ப்பாணம் – அச்சுவேலிக்கு இடையிலான தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாத காரணத்தினால் பயணிகள் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். டீசல் தட்டுப்பாடு...
Ad Widget

யாழில் நிஷாந்தன் மீது வாள் வெட்டுத் தாக்குதல்!

மிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்று காத்திருந்தபோதே பின்னால் வந்திருந்த இரு நபர்களால் வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் காயங்களுக்குள்ளாகியுள்ள அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவில்...

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ரயில்வே ஊழியர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண அதிகாரிகள் தவறியதால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, கோட்டை, மருதானை ரயில் நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படவிருந்த ரயில்...

100,000 மெற்றிக் தொன் சமையல் எரிவாயு வாங்குவதற்கு லிட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்து!!

ஒரு லட்சம் மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த கொள்வனவுக் கட்டளையின் மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள். உலக வங்கி 70 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது. மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ வழங்கியுள்ளது. இந்த இருப்பு...

22 ரயில்கள் ரத்து!!

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக ரயில்வே ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தால் இவ்வாறு ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில் பயணங்களில் அலுவலக ரயில்கள்...

யாழ் மாநகர சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

எரிபொருள் நெருக்கடி காரணமாக யாழ் மாநகர சபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன் மக்களுக்கு அவசர கோரிக்கையொன்றையும் யாழ் மாநகர சபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன் விடுத்துள்ளார். திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு நெருக்கடி நிலை தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது...

இரண்டு வாரங்கள் நாட்டை முடக்குமாறு கோரிக்கை!!

இரண்டு வாரங்களுக்கு நாட்டை மூடிவிட்டு, எரிபொருள் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய பின்னர் நாட்டைத் திறக்குமாறு ஹரிமக என்ற தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எரிபொருள் நெருக்கடியில், அத்தியாவசிய பொருட்களை பெற்று மக்களின் வாழ்வாதாரத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயு, எரிபொருள் வரிசையில் நிற்பதன் மூலம் மக்களின் உழைப்பும், செல்வமும், நேரமும் அழிக்கப்படுவதாக...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளது. லங்கா ஐஓசி நிறுவனம் நேற்றையதினம் (ஜூன் 30) திருகோணமலை முனையத்தில் இருந்து எரிபொருளை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அந்த எரிபொருள் இருப்புகளைப் பெறும் நிரப்பு நிலையங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது....

புடின் சுத்தியலால் அடித்துக்கொல்லப்படுவார்!!

திடீரென ஒருநாள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலையில் சுத்தியலால் அடித்துக்கொல்லப்படுவார் என முன்னாள் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மூத்த உளவாளியான Daniel Hoffman, புடினுடைய ஆலோசகர்கள் உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதால், அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவரை அகற்றுவதற்காக இரகசிய திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்களை புடின் கண்டுபிடித்துக் கொல்வதற்கு...

நாங்கள் மிகவும் ஆபத்தான உலகில் வாழ்கிறோம் – ரஷ்யா குறித்து பிரித்தானிய பிரதமர் எச்சரிக்கை

2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஐ பிரித்தானிய அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மாட்ரிட்டில் நேட்டோ மாநாட்டில் பேசிய பிரதமர், "எதிர்கால போர் காற்று போன்ற முக்கிய திறன்களில் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் எனவும், மிகவும் ஆபத்தான மற்றும் அதிக போட்டி நிறைந்த...