Ad Widget

ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி யாழ் மாநகர முதல்வருடன் சந்திப்பு!!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.இதன்போது மாநகர முதல்வரால் ஜப்பான் தூதுவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள்...

தப்பியோடிய 500 கைதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவம் !

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து தப்பியோடிய கைதிகளை கண்டுபிடிப்பதற்காக பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையத்தில் இன்று காலை கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மேலும் குறித்த நிலையத்தின் பாதுகாப்புக்காக இராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்...
Ad Widget

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம்!

தமக்கு பெட்ரோலை வழங்க கோரி யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சிலர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டோக்கன் பெற்றவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டமையால் இன்றைய தினம் (புதன்கிழமை) அதிகாலை தொடக்கம் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் காலை 09 மணி போல குறித்த எரிபொருள்...

காரைநகரில் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம் !

காரைநகரில் கடற்படை முகாம் அமைப்பதற்காக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது. காரைநகர் ஜே/145 கிராம சேவையாளர் பிரிவில் நீலன்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியை கடற்படை முகாம் அமைக்கவென அளவீடு செய்யும் முயற்சி 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதனை அடுத்து அங்கு கூடிய மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்...

அடுத்த கப்பல் வரும் வரை எரிபொருளை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் – அரசாங்கம்

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடுகள் 28 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன. அரசாங்கத்திடமுள்ள மிகக் குறைந்தளவிலான எரிபொருள் இருப்பினை அடுத்த கப்பல் வரும் வரை சிக்கனமாக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்து ஏனைய துறைகளைச் சேர்ந்த மக்கள்...

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எழுச்சி போராட்டத்தை தொடங்க எதிர்க்கட்சி தீர்மானம் !

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக மக்கள் எழுச்சி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள அத்தியாவசிய சேவைகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளை பாதுகாப்பதற்கான சேவைகள் என அவர் கூறியுள்ளார். பிரச்சினைகள் தீவிரமடைந்தால் மட்டுமே அமைச்சர்கள் வெளிநாடுகளிடம் தீர்வுகளை தேடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்....

வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம்!

மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாகன வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜெயந்தி விஜேதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் அபராதம் விதிக்கப்பட மாட்டாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 15 மணிநேர மின்வெட்டு!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நீர்...

பல மோசமான நோய்களால் பாதிப்பு – இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார்

பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழ்ப்போவதில்லை என்று கூறியுள்ளார். அத்துடன், புடின் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...