Ad Widget

123 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான உதவிகளை இலங்கை மக்களுக்கு வழங்க தமிழக அரசு தீர்மானம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நிலவும் தேசிய நெருக்கடி குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். நெருக்கடி காரணமாக...

மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை!!

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
Ad Widget

புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவை : ஜனாதிபதி இணங்கியதாக மைத்திரி கூறுகிறார்

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கும்,11 கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இன்று (29) நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையே வெற்றியளித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதன்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் முன்னாள்...

அலரிமாளிகைக்கு முன் பதற்றம்!!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலாமான அலரிமாளிகைக்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், அலரிமாளிகைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் பஸ் மற்றும் பொலிஸ் ட்ரக் வண்டிகளை அகற்றுவதற்காக...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாய்,முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்...

பிரதமருக்கு ஆதரவாக 117 எம்.பிக்கள்? – சர்வகட்சிகளுடனான சந்திப்பை ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சையாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள...

எரிவாயு விநியோகத்தை மட்டுப்படுத்தியது லிட்ரோ; நகரங்களில் உள்ளோருக்கு முன்னுரிமை

ஒவ்வொரு நாளும் சந்தைக்கு வெளியிடும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளாந்தம் சந்தைக்கு வெளியிடப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார்...

யாழ். நகரில் நூதனமான முறையில் இளைஞர்களிடம் அலைபேசிகள், பணம் பறித்த இருவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அலைபேசியை அபகரித்துச் சென்ற நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழிப்பறிக்...

பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்த மாதம் எதிர்கொள்ள நேரிடும் – ரணில் எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தும் அனைத்து காரணிகளும் ஒரு மையப்புள்ளியை அண்மித்துள்ளன. நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலடைந்துள்ள ஒரு நூல் பந்துப்போல் காணப்படுகிறதால் அதனை பொறுமையாக அவிழ்க்கவும் முடியாது,விரைவாக வெட்டி விடவும் முடியாது. எதிர்வரும் மாதம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நிலைமை தொடர்பில் சமூக...