Ad Widget

தனது பிறந்தநாளில் விபத்தில் உயிரிழந்துள்ள மாவிட்டபுர இளைஞன்!!

தனது பிறந்தநாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது 22) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த...

யாழில் தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின்...
Ad Widget

மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி!!

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் அது சரியான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின்...

அடுத்தவாரம் முதல் போக்குவரத்தில் ஈடுபடமாட்டாேம் – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

பஸ் வண்டிகளுக்கு தேவையான உறுதிப்பாகங்களுக்கு தட்டுப்பாடு இடம்பெற்று வருவதால் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதனால் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை பெற்றுத்தராவிட்டால் பயணிகள் போக்குரவத்து சேவையில் இருந்து அடுத்த வாரம் முதல் ஒதுங்கிக்கொள்வோம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ண தெரிவித்தார். கொழும்பில்...

அதிகரிக்கப்படுகின்றது சீமெந்தின் விலை!

இலங்கையில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து பக்கற் ஒன்றின் விலை இன்று (செவ்வாய்கிழமை) முதல் அமுலாகும் வகையில் 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. சீமெந்து உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 50 கிலோ சீமெந்தின் புதிய விலையாக 2 ஆயிரத்து 750 ரூபா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குங்கள் – ஜனாதிபதி

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அனைத்து அரசாங்கங்களும் பொறுப்புக் கூறவேண்டியுள்ளதுடன் தற்காலிக மற்றும் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முறையான அணுகுமுறையை எங்கள் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ளதால், பலன்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று நிக்காயாக்களினதும் தலைமை பீடாதிபதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று (திங்கட்கிழமை)...

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய...