Ad Widget

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 5,175 ரூபாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

மிருசுவில் பகுதியில் புகைரத பாதையை முடக்கி மக்கள் போராட்டம்!

கொடிகாமம் - மிருசுவில் பகுதியில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த சம்பவத்தினை தொடர்ந்து பாதுகாப்பான கடவை அமைத்து தரக்கோரி மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர். புகைரத பாதையின் குறுக்கே சிவப்பு துணியை கட்டியதுடன், ரயர்களை போட்டுக் கொழுத்தி பெரும் களேபரம் நடத்தியிருந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்றிருந்த பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு ஒருவர்...
Ad Widget

13 ஆம் திருத்தச் சட்டத்தினை விட்டுக்கொடுக்க முடியாது – டக்ளஸ்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,...

நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

நாட்டிலுள்ள சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறும் நோக்கில், அத்தகைய தொழில்முயற்சியாளர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முதல் மூன்று தொழில்முனைவோருக்கு நேற்று(வியாழக்கிழமை)...

மிருசுவிலில் புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – சிறிய ரக லொறி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமைடந்துள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளனர். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு...

பால் மாவின் விலை அடுத்து வாரம் மீண்டும் அதிகரிக்கும்!!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்து வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுமென பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த , குறித்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் அசோக பண்டார இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், பால்மாவின் கையிருப்பு குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா அடுத்த வாரம் கிடைக்கப்பெறுமெனவும் அவர்...

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு!!

இந்த வருடத்திற்கான க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 23ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் நவம்பர்...

மேலும் 18 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!!

இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரூம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் 4 நபர்கள், தனி நபர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின்...

பிரபாகரனின் தீர்க்கதரிசனம் இன்று இலங்கையில் இடம்பெறுகின்றது – சிறீதரன்

எங்கள் மீது நீட்டப்படும் துப்பாக்கிகள் என்றோ ஒருநாள் சிங்கள மக்கள் மீது திரும்பும் என்று அன்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தெரிவித்திருந்தார். அவரது வார்த்தைகள் இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...

மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவுநேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் நாடாளுமன்ற...