Ad Widget

மீண்டும் கட்டாயமாக்கப்பட்டது முகக்கவசம்!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பெருந்தொகையான மக்கள் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாட்டை கடந்த 18ஆம் திகதி முதல்...

யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ்....
Ad Widget

ஏப்ரல் 25ஆம் திகதி வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம்

எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு எரிவாயு விநியோகச் சங்கிலியில்...

இன்றும் நாளையும் மின் விநியோகத்தடை!!

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. மின்னுற்பத்தி நடவடிக்கைக்கு தேவையான போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் காலை...

திருநெல்வேலியில் விரிவுரையாளரின் வீட்டில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!!

திருநெல்வேலியில் உள்ள விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இந்த திருட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. விரிவுரையாளரது குடும்பம் நேற்று மாலை 5.30 மணியளவில் உறவினர் வீட்டுக்குச் சென்று...

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரிக்கை!

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் ஒன்றின் மூலம்...

இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்க தயார்!! – இந்திய தூதரகம் விளக்கம்

இலங்கை மக்கள் விரும்பினால், இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க இந்தியா தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள ருவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என இந்தியா தெரிவித்துள்ளதுடன், அதனை கடுமையாக சாடியுள்ளது. இலங்கை மக்கள் இணங்கினால் இலங்கையை இந்தியா தனது இன்னுமொரு மாநிலமாக அறிவிக்க தயார்- அதற்கு பதிலாக...