Ad Widget

ரம்புக்கனை சம்பவம் குறித்து கவலையடைகிறேன் – ஜனாதிபதி

அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ரம்புக்கனை சம்பவம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பாக பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை பொலிஸ் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும்...

யாழில் ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு!

சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ அதிகாரி ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே அவர் இவ்வாறு உயிரிழந்தார். சாவகச்சேரி தம்புதோட்ட இராணுவ முகாமை சேர்ந்த ஏழாவது விஜயபாகு ரெஜிமென்டில் கடமையாற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோப்ரல்...
Ad Widget

பேருந்து சேவைகள் இடைநிறுத்தம்!!

நாட்டில் பேருந்து சேவைகள் இன்று காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று அதிகாலை சேவைகள் இடம்பெற்ற போதும் காலை 6.30 மணிக்கு வந்த அறிவிப்பையடுத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. இன்று நாடுமுழுவதும் கடையடைப்புக்கு 300 தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தன. இந்த நிலையிலேயே இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் குழு நியமனம்

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஆராய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டியில் உள்ள அலுவலகத்திலிருந்து விசேட குழுவொன்று சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்டக்காரர்கள் மீது...

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை என தகவல்!

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும்...