Ad Widget

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர இணைப்பு

அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தினேஸ் குணவர்தன - அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம் பிரசன்ன ரணதுங்க - பாதுகாப்பு, சுற்றுலா திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து கனக ஹேரத்-...

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது தாம் மூத்த உறுப்பினர்களை கருத்திற் கொள்ளவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவிகள் வெறும் நன்மைகள் அல்ல, அது பெரிய பொறுப்பு என குறிப்பிட்ட அவர் அமைச்சர்கள் எவரும் மேலதிக வரப்பிரசாதங்களை பயன்படுத்த கூடாது என கேட்டுக்கொண்டார். நேர்மையான, திறமையான, கறைபடியாத அரசாங்கத்தை இவர்களிடம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி...
Ad Widget

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் – பிரியந்த விஜயசூர்ய

வடக்கில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியை மாற்றியமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய தெரிவித்தார். காங்கேசன்தறையில் உள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,...

யாழில் தீப்பந்த போராட்டம்!!

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக சென்றது. குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி...

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 35 ரூபாயினாலும் டீசல் லீட்டர் ஒன்றின் விலையினை 75 ரூபாயினாலும் அந்த நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 338 ரூபாய்க்கும் ஒக்டேன் 95...

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம்!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று 3 மணிநேரமும் 20 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது. இந்தநிலையிலேயே மின்வெட்டு அமுல்படுத்தும் நேரத்தில்...