Ad Widget

நீர்வீழ்ச்சியில் அடித்து செல்லப்பட்ட மூவரில் யுவதியின் சடலம் மீட்பு

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது....

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 237 மருந்து வகைகள் தட்டுப்பாடு!!

அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் செயலாளர் மருத்துவர் செனல் பெர்னாண்டோ இந்தக் கருத்தை வெளியிட்டார். மருந்துப் பற்றாக்குறையால் அரச மருத்துவமனைகளும் தனியார் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இதய நோயாளிகள், இருமல்,...
Ad Widget

யாழில் புதுவருட கொண்டாட்டத்திற்கான பொருட் கொள்வனவில் மக்கள் ஆர்வம் குறைவு!!

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என யாழ். வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள், நகை, மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் நிலையில் இம்முறை நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறதன் காரணமாக...

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அமைச்சுப்பதவியை ஏற்கமாட்டோம் – கூட்டமைப்பு

தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும்...

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்து!!

எதிர்க்கட்சி கொண்டுவரவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கையெழுத்திட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று எதிர்க்கட்சி அலுவலகத்தில் வைத்தது கையொப்பமிட்டனர். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி பதவி நீக்கப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கையெழுத்திட்டிருந்தார். இதேநேரம்...