Ad Widget

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரணப் பொதி!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை...

மன்னாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடல் வழியாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல்...
Ad Widget

மணியந்தோட்டத்தில் கொன்று புதைத்த பெண்ணின் சடலத்தை தோண்டும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டத்தில் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட மருத்துவ வல்லுநர் எஸ்.பிரணவன் ஆகியோரின் முன்னிலையில் இந்தப் பணி முன்னெடுக்கப்படுகிறது. அயல் கிராமத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் காணாமற்போயிருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த மூன்று (12.04.2022 வரை)நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மிதமானது முதல் கனமழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இந்த மழை இடியுடன் கூடிய மழையாக இருக்கும் என்பதனால் இடி மின்னல் நிகழ்வு...

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமனம்!!

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று (வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார். அத்துடன், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக வைத்தியர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அரசாங்கத்தின்...

புத்தாண்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!

ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை – சுமந்திரன்

ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்தமை, ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக்...