Ad Widget

சங்கிலியன் சிலை முன்பாக போராட்டம்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலை முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்தும் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளர் அ.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்றது

11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை : அறிவிப்பு வெளியானது!

ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதி பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கும் சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
Ad Widget

நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை!

தூய சக்தி ஆய்வு நடவடிக்கைகளுக்காக நோர்வேயின் இரண்டு பல்கலைக்கழகங்கள் யாழ். பல்கலையுடன் முக்கூட்டு உடன்படிக்கை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும், மேற்கு நோர்வே பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் நோர்வேயின் பேர்கன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையில் உயர்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்கான முக்கூட்டு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 6 ஆம் திகதி , புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர்...

கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிக்க நடவடிக்கை!

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை மேலும் 50 ரூபாயினால் அதிகரிப்பதற்கு கோதுமை மா நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன, தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதன் விலை மேலும்...

வவுனியாவில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று ( வியாழக்கிழமை) மதியம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் ஏற்பாட்டில் வவுனியா, பொது வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஹொரவப்பொத்தானை வீதியூடாக சென்று பசார் வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பழைய பேரூந்து...

புதிய அமைச்சரவை நியமனம்?

எதிர்வரும் தினங்களில் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் கூட்டத்தின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை குறித்தும் இதன்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் சில நாட்களில் இந்த நெருக்கடிகளை தீர்க்க முடியும் என பாராளுமன்ற...