Ad Widget

கொரோனா வைரஸின் எந்தவொரு புதிய பிறழ்வையும் இலங்கையால் கட்டுப்படுத்த முடியும் -சுகாதார அமைச்சு

இலங்கைக்குள் நுழையும் கொரோனா வைரஸின் எந்தவொரு புதிய பிறழ்வையும் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சில தரப்பினரின் தவறான கருத்துகள் இருந்தபோதிலும் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் இருப்பதாக சுட்டிக்காட்டினார். போதிய படுக்கைகள் மற்றும் ஒட்சிசன் இருப்புகள்...

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற்கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு கொரோனா!

வவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற் கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு நேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் இருவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட...
Ad Widget

நாள் ஒன்றுக்கு 2,000 தொற்றாளர்கள்??? வைத்தியசாலைகள் நிரம்பியுள்ளன!!

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போலவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வார்டுகள் தற்போது மற்ற நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் கொள்ளளவை தாண்டிச் செல்வதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. பொது பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும்...

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் பொது மக்களை கேட்டுள்ளனர். கடந்த 24ம் திகதி மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், 25ம் திகதி 40 தொற்றாளர்களும் இனம் காணப்பட்டுள்ளனர். தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர்களில் மேற்படி எண்ணிக்கையான தொற்றாளர்கள்...

இயற்கை உரத்தினை பயன்படுத்தி இராணுவத்தினால் செய்யப்பட்ட வயல் அறுவடை விழா

ஜனாதிபதியின் பசுமை விவசாய செய்கை திட்டத்தின் கீழ் இயற்கை உரத்தினை பயன்படுத்தி முல்லைத்தீவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட விவசாய நெற்செய்கையின் அறுவடை விழா நேற்று 26.01.2022 சிறப்புற நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடல் கரையினை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள 591 ஆவது படைப்பரிவின் தலைமையக முகாமின் பின்...

க.பொ.த உயர்தரப் பரீட்சாத்திகளுக்கு சிறப்பு அறிவிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டையை இதுவரை பெறாத விண்ணப்பதாரர் இருப்பின், அவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பரீட்சார்த்திகளில் எவரேனும் அனுமதி அட்டை கிடைக்கவில்லை...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் நேற்றைய தினம்(புதன்கிழமை) மேலும் 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 4 ஆயிரத்து 581 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 16 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள்...

ஸ்ராலினுக்கு புரிகின்றது யதார்த்தம் – ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – டக்ளஸ்

இலங்கையின் கடற்றொழில் அமைச்சரும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலினும் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன் பிடிப் படகுகளை ஏலம் விடுவது தொடர்பாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளை சேர்ந்த சில...

சைக்கிளில் பயணிக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு?? – அரசாங்கம்!

துவிச்சக்கர வண்டி (சைக்கிள்) பாவனையை ஊக்குவிக்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சைக்கிளில் பயணிக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு சலுகைகளை வழங்குவதற்கான ஒழுங்குமுறை வேலைத்திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். காற்று மாசைக் குறைக்கவும்...