Ad Widget

மஹிந்தவின் வங்கிக் கணக்கில் இருந்து ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்போதே இந்த விடயம்...

ஒவ்வொரு தமிழனுக்கும் இந்த ஆபத்து தெரியப்படுத்தப்பட வேண்டும் – கஜேந்திரகுமார்

சுமந்திரன் வெளிநாட்டுக்குச் சென்ற பொழுது அவரது செயல்கள் எந்த அளவு பிழை என்பதை சுட்டிக்காட்டி மக்கள் அவருக்கு எதிராக அணிதிரண்ட மாதிரியான ஒரு நிலைமையை இந்த ஊரிலே இந்தத் துரோகச் செயலைச் செய்து வீட்டுக்குபோக முடியாத நிலையை நீங்கள் உருவாக்காமல் அவர்களது துரோகச் செயலை நாங்கள் தடுத்து நிறுத்த முடியாது என தமிழ்த் தேசிய மக்கள்...
Ad Widget

ரயிலுடன் மோதி மாணவன் சாவு!!

சாவகச்சேரியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையைக் கடக்க முற்பட்ட மாணவன் ஒருவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இரட்டையர்களில் ஒருவர் தொடருந்துப் பாதையை கடந்த நிலையில் பின்னால் சென்ற மற்றையவர் தொடருந்துடன் மோதுண்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த உத்தரதேவி தொடருந்துடன் மோதியே நேற்று இரவு 6.45 மணியளவில் சாவகச்சேரி இந்துக்...

மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் மோதியதில் ஒருவர் பலி!!

சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுன்னாகம் மதுபான சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பி ஓடியவர்கள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது. ராசா ரவிச்சந்திரன் என்ற 50 வயது மதிக்கத்தக்கவரே உயிரிழந்தார். சுன்னாகம் மதுபான சாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தென்மராட்சியைச்...

கொக்குவிலில் வன்முறைக் கும்பல் அட்டூழியம்!!

கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வாகனங்களுக்கு தீயிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் வீட்டு வளவுக்குள் புகுந்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீயிட்டதுடன் பெறுமதியான பொருள்களை அடித்து நொருக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய்...

3 டோஸ்களையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் – சுகாதார அமைச்சு

நாட்டில் இனிவரும் காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி உள்ளடங்கலாக மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் அறிகுறிகள் தொடர்பான அறிவிப்பு – மக்களே அவதானம்

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு அறிகுறிகள் மிகவும் குறைவாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்கமைய, ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலேசான இருமல், தடிமன் மற்றும் இலேசான தொண்டை நோவு போன்ற சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிக காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படாது என்பது மற்றொரு...

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்றோம். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, கணவனை இழந்த மற்றும் விசேட தேவையுடையவர்களை கொண்ட குடும்பத்தில் இருந்து தான் நாங்கள்...

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மேலும் 14 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 877 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 2 ஆயிரத்து 763ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5 இலட்சத்து 76 ஆயிரத்து 324 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு...