Ad Widget

பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் உள்ள பாடசாலைகளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, மூடப்பட்ட இடங்கள் மற்றும் சிறிய வகுப்பறைகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்தச் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார். புத்தளத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

பாடசாலை சென்ற மாணவர்களை மோதி விட்டு தப்பியோடிய பேருந்து!!

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (24) காலை 7.00 மணியளவில் நீர்வேலி பூதவராயர் மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து சம்பவம் தொடர்பில்...
Ad Widget

பஸ்களில் நின்று பயணிப்போருக்கு புதிய கட்டணம்!!

பேருந்துகளில் ஆசனங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு கட்டணமும் நின்று பயணிக்கும் பயணிகளுக்கு வேறொரு கட்டணமும் அறவிடும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஆசன எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றால் இரண்டு வகையான கட்டணங்கள் அறிவிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அமர்ந்திருக்கும்...

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட...

நாட்டில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம் : ஒரு வாரத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள்

நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், 87 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டும் சுகாதார தரப்பினர் நாட்டில் ஒமிக்ரோன் அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலாத்துறைக்காக நாடு திறக்கப்பட்டுள்ளமை அச்சுறுத்தல் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக...

பொங்கலுக்கு முதல் நாள் நடந்த ஒரு பொங்கல்!

கடந்த தை பொங்கல் தினத்திற்கு முதல் நாள் யாழ்ப்பாணம் முத்தவெளியில் ஒரு வித்தியாசமான பொங்கல் ஒழுங்கு செய்யப்பட்டது. முத்த வெளியில் அமைந்திருக்கும் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்கான நினைவுத் தூபிகளுக்கு அருகில் ஒரு சிறைக் கூண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டு அதற்குள் வைத்து ஒரு பொங்கல் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வுக்கு தலைப்பு “விடுதலைப் பொங்கல்” என்பதாகும். அந்நிகழ்வில் கலந்து...

நாட்டில் இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்!! நாளை முதல் 2 மணிநேரமும் மின் துண்டிப்பு!!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைவாக இன்றைய தினம் ஒரு மணிநேரமும் நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டியேற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் பிரச்சினை மேலும் நீடித்து, மழைவீழ்ச்சியும்...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. அனைத்து வயதினரிடையேயும் கொரோனா தொற்று விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். பெற்றோர்கள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள்...