Ad Widget

நாட்டில் 4 மணித்தியால மின்தடை?

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு இலங்கை தவறும் பட்சத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் நாளாந்தம் மின்தடையினை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாடு தயாராக இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் எரிசக்தி...

தமிழர்கள் வழங்கிய ஆணை ராஜபக்ஷர்களுக்கு கிடைத்த ஆணையை விட மேலானது – கஜேந்திரகுமார்

தமிழர் தேசத்தை வலியுறுத்தி தமிழர்கள் தமக்கு வழங்கிய ஆணை, அரசாங்கம் பெற்ற ஆணையைவிட மேலானது என நாடாளுமன்ற உறுப்பினார்ட் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இதனை ஜனாதிபதி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தமிழர் ஆணையை மீறி கொள்கையை வெளியில் வைத்துவிட்டு வரத்தயாரில்லை என்றும் அவர் நாடாளுமன்றில் தெரிவித்தார். 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஆட்சியமைத்த...
Ad Widget

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரியும் யாழில் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது. காரைநகர் பிரதேச கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கமும் மாவட்ட கடல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களும் ஒன்றிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். பிரதேச செயலகத்திற்கு பேரணியாக சென்ற மீனவர்கள் பிரதேச செயலகம் ஊடாக ஜனாதிபதி, மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மகஜரையும் கையளித்திருந்தனர்....

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

2025 இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

ஒன்றாக்கிய நீங்களே முடித்து வையுங்கள் – பிரித்தானிய அமைச்சரிடத்தில் சம்பந்தன்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் தென் ஆசிய மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் தரிக் அஹமட் பிரபுவிடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். அதுதொடர்பில் தெரியவருவதாவது, “தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரித்தானிய கொண்டிருக்கின்ற கரிசனைகளுக்கும், அதற்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்களும் முழுமையான நன்றிகள். தமிழ் மக்கள் தமது கருமங்களை சுதந்திரமாக...

மாணவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரிப்பு!!

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரிகரித்துள்ளது. இதே நிலைமை தொடருமானால் பாடசாலை கட்டமைப்பு முழுமையாக சரிவடையும். எனவே பாடசாலைக்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட வேண்டும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில...

சர்ச்சைக்குரிய கட்டுவன் – மயிலிட்டி வீதி – கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள இராணுவம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வீதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருக்கும் 400 மீற்றர் நீளமான வீதிவிடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு , கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் – மயிலிட்டி வீதியில் 400 மீற்றர் நீளமான வீதி இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11.45 மணியளவில் பரவிய பாரிய தீ பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இராணுவ தீயணைப்பு பிரிவினரும் களத்தில் இறங்கி மேலும் தீ பரவாத வகையில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில்...