Ad Widget

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து சண்டிலிப்பாயில் போராட்டம்!

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் முன்பாக வீதியை மறித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மாவட்ட கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனமும், மாதகல் பிரதேச கடற்தொழிலாளர்களும் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். 2500 இந்திய இழுவைமடி தொழிலை நிறுத்தும் வரை போராடுவோம், இந்திய அரசு வடக்கு...

யாழ். நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!

யாழ்ப்பாண நகரில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன்போது, முதல் வருகைதரும் 300 பேர்களுக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்...
Ad Widget

பலாலி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளமை கவலையளிக்கிறது!! – அர்ஜுன ரணதுங்க

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளமை கவலை அளிப்பதாக முன்னாள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். ​நேற்று (06) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாண மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாக...

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் – எம்.கே.சிவாஜிலிங்கம்

வடமாகாண ஆளுநர் மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் எனவும் இதனை என்னால் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தன்னுடன் விவாதத்திற்கு வருமாறும் அவர் வடமாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக...

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் புதிய வகை நுளம்பு! துரிதமாக பரவும் அபாய நிலை!!

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மிகவும் அனர்த்த நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு...

பிரதமர் மோடிக்கான கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசிய தலைமைகள் கைச்சாத்து!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித் தீர்வினை வழங்க வேண்டும் என்பதோடு, இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ எனும் தலைப்பிலான கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசிய தளத்தில் செயற்படும் அரசியல்...