Ad Widget

யாழ். வளைவுக்கு அருகில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து!

யாழ்.வளைவுக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது. நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது , யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

இளைஞரின் மரணத்திற்கு நீதிகோரி முழுகடையடைப்பு போராட்டம்!!

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24...
Ad Widget

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி முதலாம் திகதி மேலும் 24 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 19 ஆக அதிகரித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஜனவரி முதலாம் திகதி உயிரிழந்தவர்களில் 20...

இன்று முதல் மீண்டும் மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் இடைநிறுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நிலவும் அந்நிய கையிருப்பு நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்களின் விளைவாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தேவையான மசகு எண்ணெயை பெற்றுக் கொண்டதன்...

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை – பிரதமர் மஹிந்த

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக நாட்டில் தகவலொன்று பரவி வருகிறது. இந்நிலையிலேயே, ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள பிரதமர், நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் பல வதந்திகளை பரப்பிவருகின்றனர் என தெரிவித்துள்ளார். நாட்டின்...

பொது இடங்களுக்கு செல்லும்போது தடுப்பூசி அட்டை அவசியமா – அரசாங்கத்தின் அறிவிப்பு!

பொது இடங்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் நடைமுறை பல தரப்பினரால் தாமதமானது. இந்நிலையில், இந்த விடயத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்தையும் இறுதி செய்ய குறைந்தது இன்னும் இரண்டு வாரங்கள் ஆகுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தடுப்பூசி அட்டையை எடுத்துச்செல்வது அவசியமா அல்லது QR குறியீட்டை அறிமுகப்படுத்துவது போன்ற பிற...