Ad Widget

கொட்டும் மழையிலும் இந்திய மீனவர்களுக்கெதிராக போராட்டம்!!

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு...

நீண்ட வார இறுதி நாட்களைக்கொண்ட 2022ஆம் ஆண்டு!

நாட்காட்டியின்படி 2022ஆம் ஆண்டு நீண்ட வார இறுதிகளின் ஆண்டாக காணப்படுகிறது. அதன்படி, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழு பொது விடுமுறைகள் வந்துள்ளன. ஜனவரி, ஏப்ரல், மே மற்றும் நவம்பர் மாதங்களில் பௌர்ணமி போயா விடுமுறைகள் வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளிலும் தைப் பொங்கல், சுதந்திர தினம் மற்றும் தீபாவளி என்பன வெள்ளி அல்லது திங்கட்கிழமைகளிலும் வந்துள்ளன. சிங்களப்...
Ad Widget

இலங்கையில் மேலும் 41 பேருக்கு ஒமிக்ரோன்!

இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம்; மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வவுனியாவுக்கு மாற்றம்

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 2022 ஜனவரி 5ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின் கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்....

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகுமாம்!

லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். சந்தைக்கான எரிவாயு விநியோகம் மற்றும் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நயினாதீவில் மினி சூறாவளி – 06 குடும்பங்கள் பாதிப்பு!

நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. இந்தநிலையில் நேற்று மாலை வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட...