Ad Widget

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு யாழில் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்புடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (வியாழக்கிழமை) வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதார துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி,விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது...

மாங்குளம் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!!

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மாங்குளம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Ad Widget

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம்!!

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் 3ஆம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாகவே எதிர்வரும்...

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை 150 ரூபாயினால் அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாயினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1345 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய...