Ad Widget

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் வயோதிப பெண் கொலை!!

போதைப்பொருள் வாங்க பணம் இல்லாததால் அதற்கான பணத்திற்காகவே வயோதிப பெண்ணை கொலை செய்ததாக கிளிநொச்சி கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஓட்டுத் துண்டுகளை துணியில் சுற்றி குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து ஒரு சோடி...

போதையில் கடமையிலிருந்த கொடிகாம பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணி நீக்கம்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியின்போது மதுபோதையில் காணப்பட்டமையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பகுதியில் குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல் கடமையில் ஈடுபட்டபோது மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் பரிசோதனையில் அவர்கள் இருவரும் மதுபோதையிலிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த இருவருடமும் சாவகச்சோி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட...
Ad Widget

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேலும் இருவருக்கு பேராசிரியர் பதவி!!

பகிரங்க விளம்பரத்துக்கமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்காக விண்ணப்பித்த யாழ். போதனா வைத்தியசாலை உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவயோகன் உளநலப் பேராசியராகவும், திறமை அடிப்படையிலான உள்ளகப் பதவியுயர்வுக்காக விண்ணப்பித்திருந்த இரசாயனவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசலிங்கம் சசிகேஸ் இரசாயனவியலில் பேராசிரியராகவும் பதவி வழங்கப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த...

சீனாவுடன் மேற்கொண்ட நாணய மாற்று ஒப்பந்தமே அந்நிய செலாவணி கையிருப்பு உயர்வுக்கு காரணம்!!

சீனாவுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை சுமார் 3.1 பில்லியன் டொலர்களாக உயர்த்த உதவியுள்ளது என சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன மக்கள் வங்கியுடன் 1.5 பில்லியன் டொலர் நாணய பரிமாற்றம் இறுதி செய்யப்பட்ட பின்னர் கையிருப்பு அதிகரிக்கப்பட்டது என ஏஜென்சியை மேற்கோளிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாணய...

வடமாகாணத்திலுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

வடக்கு மாகாணத்தில் இயங்கும் ஒவ்வொரு தனியார் நிறுவனமும் ஊழியர்கள் தினவரவுப் பதிவில் கையொப்பமிடும் வசதியை ஏற்படுத்துவதுடன் மாதாந்த சம்பளப் பட்டியலை வழங்கவேண்டும். இவ்வாறு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் தனியார் துறையில் கடமையாற்றும் ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு சுமைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ...

விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022”

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளது. யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை...

50 சதவீத மாணவர்களுடன் இன்று முதல் பல்கலைகள் செயற்பட அனுமதி

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50 சதவீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து துரித தடுப்பூசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கொவிட்...

நாடு முழுவதுமான பாடசாலைகள் ஜனவரி 3 மீண்டும் திறப்பு

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு 2022 ஜனவரி 3 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும். அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 டிசம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகியது. இந் நிலையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை...

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளரான...

வேலணை பிரதேச சபை விசேட அமர்வில் அமைதியின்மை!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வசமுள்ள, வேலணை பிரதேச சபை விசேட அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) தவிசாளர் நவசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலமையில் இடம்பெற்றிருந்தது. பிரதேச சபைக்கு சொந்தமான வேலணை வங்களாவடி கடைத்தொகுதியின் வேலைகளை முன்னெடுப்பதற்கு சபையின் நிலையான வைப்பில் இருக்கும் நிதியினை மீளப்பெறுவதற்கு சபை உறுப்பினர்களிடம் அனுமதியினை பெற்றுக்கொள்ளுவதற்காகவே இன்றைய விடேச கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இதன்போது...