Ad Widget

கிளிநொச்சிக்கு சுற்றுலா சென்ற குழுக்களுக்கிடையில் மோதல் – கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை

கிளிநொச்சி – பூநகாி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கௌதாாிமுனைக்கு சுற்றுலா சென்றிருந்த இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞா் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளாா். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை 3.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பூநகாி கௌதாாி முனைக்கு ஆனைக்கோட்டையிலிருந்து 17 போ் கொண்ட குழு சுற்றுலா சென்றுள்ளது. இதேபோல...

பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் – வீட்டில் பயிர் செய்யவும்: அரசாங்கம்

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகசந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அரசாங்கம் சந்தையில் தலையிட்டு...
Ad Widget

திருமணம் எனும் பெயரில் இலங்கைக்குள் பிரவேசிக்கும் தீவிரவாதிகள்? – அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் வாழ்க்கைத் துணை விசாவில் இங்கு வசிப்பதற்கான அறிக்கைகள் அதிகரித்து வருவதாலேயே வெளிநாட்டுப் பிரஜையை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி அவசியம் என அறிவிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது. இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி ஏன் கோரப்பட்டது என சமூக ஊடகங்களில் பெருகிய...

ஒமிக்ரோன் அலையை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் – சுகாதார அதிகாரிகள்

கொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்ட இலங்கை குடும்ப வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன, இவ்வாறான அலைக்கு முகம் கொடுப்பதற்கும் அதனைத் தவிர்ப்பதற்கும் மக்கள் தங்களைத் தாங்களே முன்னிறுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...