Ad Widget

யாழ் மக்களுக்கு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா எச்சரிக்கை!!

உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா எச்சரித்துள்ளார். இன்று யாழ். போதனா வைத்தியசாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில்,...

இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கம்!!- க.சுகாஷ்

உடன் அமுலுக்கு வரும்வகையில் இரு உறுப்பினர்களை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபை உறுப்பினர் பரமானந்தம் தவமணி மற்றும் காரைநகர் அமைப்பாளர் கணபதிப்பிள்ளை நிமலதாசன் ஆகிய இருவருமே கட்சியை விட்டு நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். காரைநகர் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் நடுநிலை...
Ad Widget

வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும் – விக்னேஸ்வரன்

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறாமல் இன்றைய நிலை தொடர்ந்தால் வடமாகாணம் மிக விரைவில் மத்தியின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு சிங்கள மயமாகிவிடும் என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்வி பதிலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ள அவர், இந்தநிலை ஏற்பட்டால் சமஷ்டிக்கோ, கூட்டுச் சமஷ்டிக்கோ, சுய நிர்ணய உரிமைக்கோ போராடுவது அர்த்தமற்றதாகப் போய்விடும் என்றும்...

பேக்கரி பொருட்களுக்கும் கட்டுப்பாடு விலை இல்லை!!

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பான எந்த கட்டுப்பாடுகளும் இன்று நள்ளிரவு முதல் இல்லை என வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த வெதுப்பக உற்பத்திகளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றை அடிப்படையாக கொண்டு விலை தீர்மானிக்கப்படும் என அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், வாடகை முச்சக்கர வண்டி கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது....

திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

திடீர் மூச்சுத் திணறல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அருள்டயஸ் கிவின்சலா என்ற பெண் குழந்தையே உயிரிழந்தார். நேற்று முன்தினம் மாலை குழந்தைக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக...

ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம் – சுகாதார அமைச்சர்

அடுத்த வருட ஆரம்பம் முதல் பொது இடங்களுக்கு பிரவேசிக்கையில் தடுப்பூசி அட்டை உடன் வைத்திருத்தலை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதன்படி இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றவர்களுக்கு சிறப்பு செயலி (ஆப்)...

தரம் ஒன்று மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கை ஏப்ரல் முதல் இடம்பெறும் – அமைச்சர்

2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பாடசாலைக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக கூறினார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை விடுமுறை வழங்கப்படும் என்றும்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் மோதல் – ஐவர் காயம்!

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானக் கல்லூரியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர். காயமடைந்த மாணவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை...

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று காலை முதல்...

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திடீர் அதிகரிப்பு!

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207...