Ad Widget

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் – ஜனாதிபதி

பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு!

எரிவாயு நிறுவனங்களால் புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். எரிவாயு வெடிப்புகளை விரைவில் நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Ad Widget

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம்...

கொழும்பு யாழ் தனியார் சொகுசு பேருந்து விபத்து!! ஒருவர் பலி பலர் படுகாயம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து (AC bus) மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ் உருண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது. இதன்போது பஸ்ஸில் பயணித்த பலர் படுகாயமடைந்துள்ளதுடன்...

இலஞ்சம், ஊழல் சம்பவங்கள் முறைப்பாடளிக்க உத்தியோகபூர்வமாக இணையத்தளம்

நாட்டுமக்கள் தமக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இலஞ்சம் மற்றும் ஊழலுடன் தொடர்புடைய அனுபவங்களை முறைப்பாடு வடிவில் பகிர்ந்துகொள்வதற்கும் அதுகுறித்து முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்றவகையில் ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பினால் வடிவமைக்கப்பட்டுள்ள 'அப்பேசல்லி' என்ற இணையப்பக்கம் சர்வதேச இலஞ்ச, ஊழல் ஒழிப்பு தினமான 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ட்ரான்ஸ்பேரன்ஸி...

15ஆம் திகதி முதல் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும்!

தனியார் பேருந்துகளின் உள்ளூர், வெளியூர் மற்றும் கொழும்புக்கான இரவு நேர சேவைகள் என்பன எதிர்வரும் 15ஆம் திகதி முதல் புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தனியார் பேருந்தின் உள்ளூர் சேவை பஸ்கள்...

அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பிற்கு இடமளிக்க முடியாது – அரசாங்கம் திட்டவட்டம்!

வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச ஊழியர் ஆட்சேர்ப்பிற்கும் இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி

நாட்டின் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியாக இலங்கை மக்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை வழங்க சுகாதார அமைச்சு கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் கொழும்பு நகரப் பகுதியில் வசிக்கும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக ஃபைசர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது....

இலங்கையின் தொல்பொருட்களை சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்து!

இலங்கையின் தொல்பொருட்களை ஆய்வுப் பணிகளுக்காக சீனாவுக்கு அனுப்புவதற்கான உடன்படிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) கைச்சாத்திடப்படவுள்ளது. அதற்கமைவாக சீனாவின் தனியார் நிறுவனம் ஒன்றுடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டவுள்ளதாகத் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த உடன்படிக்கைக்கு அமைய, இலங்கையின் தொல்பொருள் ஆய்வுப் பணிகளுக்காக, சீனாவின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அந்த்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.