Ad Widget

‘கடற்படைக்கு காணி வழங்கப்படும் என நான் கூறவில்லை’ – வடக்கு ஆளுநர்

” மாதகல் காணிகளை கடற்படைக்கு வழங்குவதாக நான் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை.” என்று வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். வடமாகாண ஆளுநர் கடற்படைக்கு மாதகல் காணிகளை வழங்குவதாக தெரிவித்து சில ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளிவந்த நிலையில் இது தொடர்பில், இன்று தனியார் நிறுவனத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்று (வியாழக்கிழமை) அடையாள மௌன தொழிற்சங்கப் போராட்டமொன்று இடம்பெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கமைய நீண்டகாலமாக நிலவிவரும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் அடையாள மௌன...
Ad Widget

நல்லூர் பகுதியிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடிப்புக்குள்ளான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் சமையலின் போது எரிவாயு அடுப்பு எரிவதை அவதானித்த வீட்டு உரிமையாளர், இது தொடர்பில் அருகிலுள்ள வர்த்தக நிலையத்துக்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய...

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மழை உடனான காலநிலையின் பிற்பாடு டெங்கு...

எரிவாயு கலவையை மாற்றியமைத்தமைக்கான ஆதாரம் வெளியாகியுள்ளது!!

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உள்நாட்டு LPG எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவையை மாற்றியமைத்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ளார். அந்த ஆவணத்தை பகிர்ந்துள்ள எம்.பி, “லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 18 லீற்றர் சிலிண்டரின் எடையை 12.5 கிலோவிலிருந்து 9.2 கிலோவாக மாற்றியபோது, ​​20:80...

எந்த நேரத்திலும் முழு இலங்கையும் இருளில் மூழ்கக்கூடும்? – முக்கிய அறிவிப்பு வெளியானது!

மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு இதனை தெரிவித்துள்ளார். சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமையினால், 8 மணிநேரத்திற்கு மேலதிகமாக பணிப்புரிய போவதில்லை...

அராலியிலும் இரண்டு வீடுகளில் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறின!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவிலுள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும், 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் வெடித்துச் சிதறியுள்ளன. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு வீட்டினரால் நேற்று (புதன்கிழமை) முறைப்பாடு பதிவு...

தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

மன்னார் – தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு நேற்றையதினம் மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்களாக 50...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமையநேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 744 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 564,733 ஆக அதிகரித்துள்ளது.