. December 1, 2021 – Jaffna Journal

நமது நாட்டிற்கு குறித்த பிறழ்வு வரவில்லை என எவராளும் கூற முடியாது!!

ஒமிக்ரோன் பிறழ்வு இந்நாட்டிற்கு வந்துள்ளதாக உறுதியாக கூற முடியாது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டிற்கு குறித்த வைரஸ் தாமதமாக வரக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.... Read more »

காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!!

மாதகலில் கடற்படை முகாம் அமைப்பதற்கு தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றையதினம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று மதியம் ஒரு மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ்... Read more »

குறைந்த தரத்திலான உபகரணங்களே தீப்பிடிப்புக்கு காரணம்; Litro நிறுவனம்

நாட்டில் தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சமையல் எரிவாயு தொடர்பான தீ பரவல் மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில், அது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள லிட்ரோ நிறுவனம், தரம் குறைந்த சாதனங்கள் காரணமாக இச்சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.... Read more »

இலங்கையில் படிப்படியாக அதிகரித்து வரும் HIV நோயாளர்கள்!!

னைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கடந்த சில வருடங்களாக எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (01) உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சமத்துவமின்மைக்கு... Read more »

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, சுன்னாகம்... Read more »

முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதலை நடத்தவில்லை என்கின்றது இராணுவம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த உண்மைகள் திருபுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஊடகவியலாளர் மீது படையினர் தாக்குதல் நடத்தவில்லை எனவும் இராணுவத் தலைமையகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. இராணுவ வீரர்களுடன் பேசியவாறு பின்னோக்கிச் சென்றவேளை,... Read more »

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி- தனங்களப்பு பகுதியிலுள்ள பண்ணை வீட்டில் இருந்து சடலமாக இன்று (புதன்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். புத்தூர் வடக்கு, ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆவரங்கால் பகுதியை... Read more »

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!!

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் தாக்கியுள்ளார்.... Read more »

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கை ஏப்ரல் 18 இல்!!

அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்Lள்ளது. இதற்கமைவாக 2021 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8... Read more »

புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த புதிய சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கமைய புதிய வழிகாட்டல்களுக்கு... Read more »

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – விசேட அறிவிப்பினை வெளியிட்டது லிட்ரோ எரிவாயு நிறுவனம்!

லிட்ரோ சமையல் எரிவாயு தொடர்பில் சிக்கல்கள் இருப்பின் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சமையல் எரிவாயு குறித்து ஏதேனும் சிக்கல்கள் இருக்குமாயின் பொதுமக்கள் 1311 என்ற... Read more »