Ad Widget

மாவீரர் நினைவேந்தலுக்கு தடைகோரும் மனு தள்ளுபடி

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றத்தில் சாவகச்சேரி, கொடிகாமம் பொலிசாரால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 13 பேருக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி இன்று (22) சாவகச்சேரி நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்தனர். வழக்கை விசாரித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற...

அரசை விமர்சிக்க அரச ஊழியர்களுக்குத் தடை!!

சமூக வலைத்தளங்களின் மூலம் அரசையும், அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு அரச ஊழியர்களுக்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசையும், அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதாக எழுந்த முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட...
Ad Widget

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் – நாடாளுமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை: சுகாதார அமைச்சு!

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது இடங்களுக்குச் செல்லும்போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்கும் யோசனைக்கு சட்டமா அதிபர் திணைக்களம்...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 19 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆண்கள் 12 பேரும் பெண்கள் 07 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 127ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 697 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...

நாளையிலிருந்து மீண்டும் மழை அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டிற்கு அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் விருத்தியடையும் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழை நிலைமை நாளையிலிருந்து (23ஆம் திகதி) அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....