Ad Widget

யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லையில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை!!

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பொலிஸாரினால் முன்வைக்கப்படண விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சார்பில் இந்த மனுக்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. முன்னர் கோப்பாயில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் அமைந்துள்ள இராணுவத்தின் 512 பிரிகேட் தலைமையகத்துக்கு...

யாழ். பல்கலைக்கழகம், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை

யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்கும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. யாழ்.பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா.நிமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சார்பில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவும், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் சார்பில்...
Ad Widget

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சைகளை நடாத்துவதில் மாற்றம்!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரிட்சைகளை நடாத்துவதில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரிட்சைகள் இனிவரும் காலங்களில் பரீட்சைகள் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடாததப்படுமென மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கையை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய முறைமையின் கீழ் விண்ணப்பதாரிகள் அவர்கள்...

நாட்டில் டெல்டா திரிபின் மற்றுமொரு வகை கண்டறியப்பட்டுள்ளது!!

நாட்டில் பரவலடைந்துள்ள டெல்டா திரிபின் மற்றுமொரு வகை கண்டறியப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் மூலக்கூற்று பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு B.1.617.2.104 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டில் முன்னதாக கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு B.1.617.2.287 என அடையாளப்படுத்தப்பட்ட...

தென்மராட்சியில் 16 நாட்களில் கொரோனோவால் 4 பேர் உயிரிழப்பு – 118 பேருக்கு தொற்று!

தென்மராட்சிப் பகுதியில் கொரோனாப் பரவல் மிகத் தீவிரம் பெற்றுள்ளதுடன், கடந்த 16 நாட்களில் மாத்திரம் 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 04 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். தினமும் சராசரியாக 8 முதல் 10 தொற்றாளர்கள் என்றளவில் எண்ணிக்கை உயரத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சுகாதார நடைமுறைகளை மக்கள் இறுக்கமாகப் பின்பற்றாமை...

யாழ். பல்கலைக்கழகத்தில் தடைகளையும் மீறி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்கீடான நேற்று (18) பல்வேறு தடைகளையும் தாண்டி யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணி அளவில் பல்கலைக்கழகத்திற்கு கார்த்திகை விளக்கீட்டினை கொண்டாடுவதற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியொகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் ஆன்மீகரீதியான செயற்பாடுகளை மேற்க் கொள்ளவும்...

நாட்டில் பல மாவட்டங்களில் கொவிட்-19 கொத்தணிகள் அடையாளம்!!

நாட்டில் 5 மாவட்டங்களில் கொவிட்-19 கொத்தணிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி, அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் இவ்வாறான கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் நேற்று ஊடகங்களிடம் கூறினார். சுகாதார நெறிமுறைகளை மீறி குறித்த பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள், மத நடவடிக்கைகள் மற்றும்...

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் நேற்றுமுன்தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ண்க்கை 14 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது.

பெற்றோல் – சமையல் எரிவாயு தாங்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன!

பெற்றோல் மற்றும் சமையல் எரிவாயுவை உள்ளடக்கிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. இதற்கமைய 36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் தாங்கிய சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்று முன்தினம் நாட்டை வந்தடைந்தது. மேலும் 40,000 மெட்ரிக் தொன்...

பாடசாலைகளுக்கான புதிய சுகாதார விதிமுறைகள் வெளியானது!

இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள 6,7,8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளின் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக புதிய சுகாதார விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியா் நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானால் செயற்பட வேண்டிய விதிமுறைகள் உள்ளடங்கிய வழிமுறைகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.