Ad Widget

மாதகலில் மக்களின் எதிர்ப்பால் காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது. மாதகல் J/150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்தது. காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்தபோது, காணி உரிமையாளர்கள்,...

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட் தொற்று!

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட்-19 நோய் அறிகுறிகள் காணப்பட்டதால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் பணியாற்றும் 15 உத்தியோகத்தர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் பிசிஆர் பரிசோதனையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறையினர்...
Ad Widget

கடல் பகுதிகளில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மத்திய வங்காள விரிகுடா, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில்...

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று (புதன்கிழமை) காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த ஆணின் சடலமானது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய அடுத்து சம்பவ...

நேற்றையதின்ம் 720 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!!

நாட்டில் மேலும் 192 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் நேற்றையதின்ம் 720 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 552,994 ஆக...

ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கும்!

சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரட் ஒன்றின் விலையை ரூபா 5 ஆல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த வருடம் அரசாங்கம் சிகரெட்டிலிருந்து 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக, சுகாதார அமைச்சின் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர், விசேட...

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ்

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இன்று (17) முதல் வழங்கப்படவுள்ளது. பூஸ்டர் டோஸாக பைசர் கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன...