. November 8, 2021 – Jaffna Journal

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க நடவடிக்கை – அரசாங்கம்

இலங்கையில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொது மக்கள் பொது இடங்களுக்கு பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் அனுமதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு... Read more »

தீவகத்தில் காணி சுவீகரிப்புக்கான அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தம்!

மண்டைத்தீவு, அல்லைப்பிட்டி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்படவிருந்த கடற்படையினருக்கான காணி சுவீகரிப்புக்கான காணி அளவீடு செய்யும் பணி , பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், காணி சுவிகரிப்புக்கு வருகை தந்த நில அளவைத் திணைக்கள அரச அலுவலர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச... Read more »

வடமாகாணத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு!

வடமாகாணத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கும், யாழ்.பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, கடற்பகுதி கொந்தளிப்பாக இருக்கும் எனவும் மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது எனவும் எச்சரித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு... Read more »

150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி – மக்களே அவதானம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, நாட்டின் பல இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென்றும் அத்திணைக்களம் எதிர்வகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய... Read more »

சீனி, அரிசி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு பெரிய விடயமல்ல : விலையேற்றத்தால் எவரும் உயிரிழக்கவில்லை- ரஞ்சித் பண்டார

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தினால் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. சீனி, அரிசி ஆகிய பொருட்களின் விலை அதிகரிப்பு பெரியதொரு விடயமல்ல. கொவிட் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்துள்ளமைக்கு அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற... Read more »

காணாமல்போனவர்கள் குறித்து ஆராய டக்ளஸ் நியமிக்கப்பட்டமையை ஏற்க முடியாது – சாணக்கியன்

காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை காணாமலாக்கப்பட்டவர் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்துள்ளமையை ஏற்க முடியாதென மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

10 – 13ஆம் வகுப்புகளுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் 10 முதல் 13 வரையான தரங்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இன்று (திங்கட்கிழமை) மீள ஆரம்பிக்கப்படுகின்றன. கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த வகுப்புக்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு கொரோனா தடுப்பு குழு அனுமதி... Read more »

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிக்க துரித தொலைபேசி இலக்கம்!

நாட்டில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தத்திற்கு முகம்கொடுப்பதற்காக மத்திய நிலையம் தயாராக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் எந்தப் பகுதியிலும் அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்குத் அறிவிக்க... Read more »