Ad Widget

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34ம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தினமானது யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் வைத்தியசாலையில் கடமையிலிருந்த 21 பேர் சுட்டு படுகொலை...

நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வரும் – க.வி.விக்னேஸ்வரன்

வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகிறது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (20) ஊடகங்களுக்கு வழங்கிய கேள்வி பதிலின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கள்...
Ad Widget

பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெறுகிறது! – எம்.ஏ.சுமந்திரன்

வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக சட்டவிரோதமான...

பயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது

பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அதன்பிரகாரம் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனை கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில், யாழ். பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இவ் உத்தியோகபூர்வ இணையத்தளமானது யாழ். மாநகர முதல்வர் வீ.மணிவண்ணனினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கஜமுகன் இந்த இணையத்தளத்தினை இலவசமாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இந்த இணையத்தளத்தின்...

சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகளே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் பெற்றோரின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டதாகவும் பாடசாலைகளுக்குச் சென்று கற்பித்தல் நடவடிக்கைகளை...

நாட்டில் புதிதாக 645 பேருக்கு கொரோனா – மேலும் 18 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 305 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 674 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில்,...

பாடசாலைக்கு செல்லாமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் !

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடமைக்கு சமுகமளிக்க அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் கடமைக்கு சமுகமளிக்காமல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி...

இழுவைப்படகுகளை தடை செய்யக் கோரும் கடல்வழிப் போராட்டம் முல்லைத்தீவில் ஆரம்பமாகி பருத்தித்துறையில் நிறைவு

தமிழர் தாயக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் நேற்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை முற்பகல் 9.30 மணியளவில் வந்தடைந்தது. இழுவைப் படகு மீன்பிடி முறை, கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு...

“அவசியமற்ற பயணங்களை டிசெம்பர் வரை தவிருங்கள்” – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

அவசியமற்ற பயணங்களை குறைந்தபட்சம் டிசெம்பர் இறுதி வரை கட்டுப்படுத்துமாறு சுகாதாரத் துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. தினமும் சுமார் 700 கோவிட் -19 தொற்றாளர்கள் பதிவாகி வருவதாகவும், எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில், தேவையற்ற பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேலா குணவர்தன தெரிவித்துள்ளார். இது உறவினர்களைப் பார்க்கவோ அல்லது...

ஒக்டோபர் 21இல் வடமாகாணத்தில் ஆரம்பப் பாடசாலைகள், முன்பள்ளிகளை ஆரம்பிப்பதற்கான பணிகள் நிறைவு!!

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் 1 முதல் தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளை வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளது என்று மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அன்றைய தினமே முன்பள்ளிகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்....

எரிபொருள் விலையை உடனடியாக அதிகரியுங்கள் – அதிகரிக்கும் அழுத்தம்

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியாது. எனவே பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஐ.ஒ.சி நிறுவனம் ஆகியன அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தின் அனுமதியை பெற்று எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என்ற தேவைப்பாடு இல்லாத போதிலும்...

உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு – வடக்கு மற்றும் கிழக்கில் போராட்டங்கள்

விவசாயிகள் தற்போது முகங்கொடுத்துள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாகவும் இன்று காலை 9 மணிமுதல் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையிலான போராட்டம் தற்போது...

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சுகாதார ஆலோசனையைப் பாதுகாக்கவும் – இராணுவத் தளபதி

நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் சுகாதார விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு இராணுவ தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார். மித்ரா சக்தி இராணுவப் பயிற்சியை அவதானித்த பின்னர் இராணுவ தளபதி இன்று ஊடகங்களுக்கு இந்தக் கருத்தை வெளியிட்டார். “கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று ஜனாதிபதி கோத்தாபய...

யாழில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90 ஆவது ஜனனதினம் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90 ஆவது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்துல் கலாமின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு...

ஹைலன்ட் பால் மாவின் விலைகளும் அதிகரிப்பு

பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய உற்பத்தியான ஹைலன்ட் பால் மாவின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக MILCO தனியார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 400 கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 90 ரூபாவினாலும், ஒரு கிலோ கிராம் ஹைலன்ட் பால் மாவின் விலை 225 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 400 கிராம்...

சாதாரண நோயாளர்களுக்கு வைத்திய சாலைக்கு வந்து சிகிச்சை பெற முடியும் – த.சத்தியமூர்த்தி

கொரோனா தொற்று பரவல் அபாயம் காரணமாக வீடுகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சாதாரண நோயாளர்கள் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறலாம். என பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் தற்சமயம் ஓரளவு குறைவடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மட்டுப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் வழமைக்கு திரும்பி கொண்டிருக்கின்றது. வைத்தியசாலையின்...

தீயில் எரிந்து குடும்ப பெண் மரணம் – கணவர் கைது

வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (14) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் வீடு ஒன்றின் கூரை மற்றும் யன்னல் தூவரம் ஊடாக நெருப்பு மற்றும் புகை...

சுன்னாக காவல்துறையினரினால் தப்பிவிடப்பட்ட வன்முறையாளர்களில் ஒருவர் கைது – மற்றையவர் நீதிமன்றில் சரண்!

ஏழாலையில் வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை, அயலவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்களை காவல்துறையினர் தப்பிக்கவிட்ட நிலையில் ஒருவர் காவல்துறையினரினால் மீளவும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் என தமக்கு சுன்னாக காவல்துறையினர் அறிவித்து உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வட பிராந்திய இணைப்பாளர் த....

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி இழப்பீட்டினை பெற்றுக் கொடுக்கவும் – பிரதமர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது...
Loading posts...

All posts loaded

No more posts