Ad Widget

எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இல்லை!

எரிபொருள் விலையை அதிகரிக்க எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (24) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இந்த...

செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின்போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரி பொறுப்பேற்றார்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார். அன்றைய தினம் தொடக்கம் குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் கடமைகளை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்றைய...

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் இன்று ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவுகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. அதற்கமைய, தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்பப் பிரிவுகளை இவ்வாறு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் பாடசாலை சீறுடைகளை அணிவது கட்டாயமில்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் அதிகளவான வெடிபொருட்கள் மீட்பு

மருதங்கேணி தெற்கு தாளையடி பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து அதிகளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்தக் காணியை காணி உரிமையாளர் சுத்தம் செய்தவேளை, அதிகளவான வெடிபொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார். இது தொடர்பாக உடனடியாகவே குறித்த காணி உரிமையாளரால் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொலிஸார் நீதிமன்ற அனுமதியைப் பெற்று...