. October 21, 2021 – Jaffna Journal

மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – மக்களுக்கு எச்சரிக்கை!

மக்களின் கவனயீனமான நடவடிக்கையினால் எதிர்காலத்தில் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மாகாண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை... Read more »

வட்டுக்கோட்டையில் முகநூல் ஊடாக மிரட்டி கப்பம் பெற்ற நபர் கைது!

குடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை பணத்தினை கப்பமாக பெற்று வந்த நபர் ஒருவரை நேற்று வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வட்டுக்கோட்டை பகுதியை... Read more »

இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34ம் ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தினமானது யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த... Read more »

நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வரும் – க.வி.விக்னேஸ்வரன்

வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்து வருகிறது என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (20) ஊடகங்களுக்கு வழங்கிய கேள்வி... Read more »

பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெறுகிறது! – எம்.ஏ.சுமந்திரன்

வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து... Read more »

பயணக் கட்டுப்பாடு நீடிப்பு – முக்கிய அறிவிப்பு வெளியானது

பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். அதன்பிரகாரம் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனை கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி... Read more »

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்!

யாழ். மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில், யாழ். பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இவ் உத்தியோகபூர்வ இணையத்தளமானது யாழ். மாநகர முதல்வர் வீ.மணிவண்ணனினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான... Read more »

சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைகள் மீள ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் 200க்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் சுமார் 6 மாதங்களுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக, மூடப்பட்டிருந்த பாடசாலைகளே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளை சுத்தம் செய்யும்... Read more »

நாட்டில் புதிதாக 645 பேருக்கு கொரோனா – மேலும் 18 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 33 ஆயிரத்து 305 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4 இலட்சத்து... Read more »