Ad Widget

வல்லிபுரம் ஆழ்வார், சந்நிதி முருகன் ஆலயங்களில் பொலிஸ் மா அதிபர் வழிபாடு

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வதற்கு பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன நாளை கிளிநொச்சியில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ள நிலையில் இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். இன்று நண்பகல் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம், தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்....

விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டம்- எம்.ஏ. சுமந்திரன்

எதிர்வரும் 17 மற்றும் 18 திகதிகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார் யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...
Ad Widget

மாகாணசபை முறைமை தமிழர்களுக்கு தீர்வாகாது – சிவாஜிலிங்கம்

மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டாலும் அதனை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைக்கு இருக்கின்றபோதும் அதனை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வி எழுவதாகவும் தெரிவித்தார். அரசாங்கம் தேர்தலை நடாத்துவதற்கு...

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் – அமைச்சர் கம்மன்பில

நிதி அமைச்சினால் நிவாரணம் வழங்கப்படாவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரு லீட்டர் பெட்ரோலின் விலையை 15 ரூபாயாகவும் ஒரு லீட்டர் டீசலின் விலையை 25 ரூபாயாகவும் அதிகரிக்க...

முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு – மக்கள் விசனம்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை தொடர்பில் மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். அண்மைய நாட்களாக முகமாலை வடக்குப் பகுதியில் கடும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. வாய்க்கால்களில் மண் ஏற்றப்பட்டு துரிசும் உடைத்தெறிய பட்டு மண் ஏற்றப் பட்டு வருகின்றது. இதனால் வெள்ள...