Ad Widget

வடக்கில் 12-19 வயதுக்குட்பட்ட சிறப்பு தேவை, நாள்பட்ட நோயுடையோருக்கு பைசர் தடுப்பூசி வழங்கல் வெள்ளியன்று ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் சிறப்புத்...

தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகளால் பீதியடைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு

சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் இலங்கை தேவாலயங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி அடிப்படைத் தகவலை அடிப்படையாகக் கொண்டது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு குறித்த தகவல் அந்தந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல். கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பீதியடைய எந்த...
Ad Widget

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்வு!!

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டம்!!

தென் மாகாணத்தில் உள்ள, 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் தென் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா ஊடகமொன்றுக்க தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி!

தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள 30 – 60 வயதுக்கு உட்பட்டோருக்கு இவ்வாறு தடுப்பூசியின் மூன்றாவது...